செப்டம்பர் மாதம் தியாகி திலீபன் மாதம்

செப்டம்பர் மாதம் தியாகி திலீபன் மாதம்.

இந்திய அமைதிப்படை ஈழத்தில் அட்டூழியம் செய்ததை அடுத்து அதை தடுத்து நிறுத்தக்கோரி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சொட்டு நீர் கூட அருந்தாமல் 1987 செப்டம்பர் 15-ஆம் தேதி உண்ணாவிரதம் இருந்த தியாகி திலீபன் இந்திய அரசின் நயவஞ்சகத்தாலும், இலங்கை அரசின் இனவாதத்தாலும் 1987 செப்டம்பர் 26-ஆம் தேதி சனிகிழமை அன்று 12 நாட்கள் பிறகு மரணம் அடைந்தார்.

ஈழ விடுதலை வரலாற்றில் தியாகி திலீபனின் மரணம் ஒரு அழியாத வரலாறு. எந்த இந்தியா தங்களை காக்க போகிறது என்று ஈழ மக்கள் நம்பிக் கொண்டு இருந்தார்களோ அந்த இந்தியாவின் துரோகத்தையும், இலங்கை இனவாத அரசின் கோரமுகத்தையும் ஒருசேர ஈழத்தமிழ் மக்களுக்கு தன் உயிரைக் கொடுத்து காட்டியவன் தியாகி தீலிபன்.

அவரது மரணம் தான் ஈழமக்களுக்கு ‘தமிழ் ஈழத்தின்’ தேவையை உணர வைத்தது. ஆகவே இந்த செப்டம்பர் மாதம் தியாகி திலீபன் மாதம் என்கிற அடிப்படையில் அவரது தியாகத்தை நினைவு கூர்வோம். தமிழ் ஈழம் என்கிற லட்சிய பாதையை நோக்கி நகர்வோம்.

தமிழர்களின் தாகம்
தமிழீழத் தாயகம்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply