ஓவியர் தோழர் வீர சந்தானம் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீர வணக்கம்

ஓவியர் தோழர் வீர சந்தானம் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீர வணக்கம்

தன் வாழ்நாள் முழுதும் தான் கற்ற கலையை அறச்சீற்றத்தோடும், கலையுடன் சேர்ந்த அரசியல் பார்வையோடும் வாழ்ந்தவர் ஐயா வீரசந்தானம் அவர்கள்.

தமிழ்,தமிழர் என்று வாழ்ந்த வெகு சொற்பமான கலைஞர்களில் மிகவும் முக்கியமானவர் ஐயா வீரசந்தானம் அவர்கள்.மே17 இயக்கத்தின் அனைத்து போராட்டங்களிலும் தனது உடல் நலனை பற்றிக்கவலைப்படாமல் கலந்துகொண்டவர். மே17 இயக்கம் என்றில்லை தமிழர் உரிமை சார்ந்த நடக்கும் போராட்டங்கள் அனைத்திலும் அது யார் நடத்தினாலும் தனது பங்களிப்பு இருக்கவேண்டுமென்று தவறாது கலந்து கொண்டவர்.

தஞ்சையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் இறுதி போரில் இனப்படுகொலை செய்யப்பட்டதை தத்ரூபமாக கருங்கல் சிற்பங்களாக வடித்து வருங்கால சந்ததியினரிடம் சேர்க்கும் விதத்தில் வடிவமைத்தவர்.

அத்தகைய அறமிக்க தோழர் வீரசந்தானம் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply