ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு ஜனவரி 15முதலே அறிமுகப்படுத்தப்படும் அபாயம்

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு ஜனவரி 15முதலே அறிமுகம்:

உலக பொது வர்த்தகக் கழகத்தில் ரேசன் கடைகளை இழுத்து மூடும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மோடி அரசு. அதனை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதாவது
1.விவசாய உணவு உற்பத்திக்கான மானியம் குறைப்பது.
2.விவசாயிகள் விவசாயம் செய்ய குறைந்த விலையில் கிடைத்துவந்த நகைகடன் வட்டியை கடுமையாக உயர்த்தியது.
3.விளை நிலங்களை பெரிய பெரிய கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு கொடுக்கும் விதமாக நில அபகரிப்பு சட்டம் கொண்டுவந்தது.
4.விளையும் பொருட்களை விவசாயிகளிடமிருந்து அரசு வாங்காமலும், சேமிக்காமலும் இருக்க வழிவகை செய்யும் உணவு பாதுகாப்பு சட்டம் போட்டது.
5.ரேசனில் கிடைக்கும் பொருட்களுக்கான பணத்தை வங்கியில் போட்டு வெளிச்சந்தையை ஊக்குவித்தது. என்று பிஜேபி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அதில் அடுத்து மிக முக்கியமானது தான் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு எனும் திட்டம்.

இதன்படி நாடு முழுக்க ரேசனில் பொருட்கள் வாங்குபவர்களை பல்வேறு வகையில் தரம் பிரிக்கும் ஸ்மார்ட் கார்டு திட்டத்தை அமல்படுத்துகிறார்கள். மேலும் வெவ்வேறு மாநிலங்களில் இருப்பவர்கள் பிழைப்பு தேடி வரும் ஊரில் ரேசனில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். உதாரணமாக தமிழகத்தில் லட்சக்கணக்கில் வடமாநிலத்தவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் இனி தமிழக ரேசன் கடையில் பொருட்கள் வாங்கினால் தட்டுப்பாடு வருமே அதற்கு மத்திய அரசு ஏதேனும் வழி வைத்திருக்கிறதா? மாநில அரசே அதையும் பார்த்துக்கொள்ள வேண்டுமெனில் இந்த கூடுதல் பொருளாதரா சுமையை தாங்கமுடியாத மாநில அரசுகள் என்ன செய்யும். இன்னும் கடுமையான வழிமுறைகளை திணித்து ரேசன் பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் இதை தவிர மாநில அரசுக்கும் வேறு வழியில்லை. அப்படி செய்யும் பட்சத்தில் ரேசன் கடைகளினால் பயன்பாடு குறைந்து போகும் இது ரேசன் கடையை இழுத்து மூடும் நடவடிக்கையின் ஒருபகுதி தானே..

இதைத்தான் ஜீன் 2020 அமல்படுத்துகிறோமென்று சொல்லி, இந்த சனவரி 15’2020லிலேயே 12மாநிலங்களில் அவசர கதியில் அறிமுகப்படுத்துகிறார்கள். எந்தவித சரியான வழிகாட்டு முறையும் இல்லாமல் மாநிலங்களை ஒழித்துக் கட்டவும், உலக வர்த்தகத்தின் செல்லபிள்ளை என்று பேர்வாங்கவும் ரேசன் பொருட்களால் பயன்பெரும் 80 கோடி இந்தியர்களை காவு வாங்க துடிக்கிறது இந்த மோடி அரசு.

https://www.dnaindia.com/…/report-one-nation-one-ration-car…

இந்திய அரசே!

1.ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை கைவிடு.
2.விவசாய கொள்முதல் மற்றும் விவசாய உற்பத்திக்கான மானியங்களை குறைக்காதே.
3. ரேசன் கடைகளை இழுத்து மூடும் எண்ணத்தை கைவிடு.
4.உலக பொதுவர்த்தக கழகத்தில் இருந்து வெளியேறு.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply