மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேரின் நீதிக்காக போராடிய தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேரின் நீதிக்காக போராடிய நாகை திருவள்ளுவன், வெண்மணி உள்ளிட்ட 24 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 5-12-2019 நடைபெற்றது.

அமைதியாக போராடிய மக்களைத் தாக்கிய காவல்துறையின் செயலைக் கண்டித்தும், இறந்த மக்களுக்கு உரிய இழப்பீடும் அரசு வேலையும் வழங்க வலியுறுத்தியும் கோரிக்கைகளை முன்வைத்து தோழர்கள் பேசினர்.

பல்வேறு தோழமை இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்டு கண்டன உரையாற்றியவர்கள்:

1)மே பதினேழு இயக்கம்- மகாமணி.
2. தமிழ் தமிழர் இயக்கம்- பரிதி
3. திராவிடர் விடுதலைக்கழகம் – ம.பா. மணிஅமுதன்
3. தந்தை பெரியார் திராவிடர் கழகம் – தமிழ்ப்பித்தன்.
4. திராவிடர் கழகம்- செல்வம்
5. திராவிடர் தமிழர் கட்சி- முத்துராக்கு
6. விடுதலை சிறுத்தைகள் கட்சி- கனிஅமுதன், இன்குலாப்
7. தமிழ் புலிகள் கட்சி – துர்கா
8. வனவேங்கைகள் கட்சி – இரணியன்.
9. ஆதிதமிழர் கட்சி- விடுதலை வீரன்.
10. வழக்கறிஞர்- கதிர்வேல்
11)அகில இந்திய மஸ்லிஷ் கட்சி- காதர் பாட்சா
11) SDPI- சிவசுப்பிரமணியன்
12) 7 தமிழர் விடுதலைக்கட்சி- காந்தி.
13) தமிழ்த்தேச மக்கள் முன்னனி- மேரி.
14) திலீபன் செந்தில்-ஏழு தமிழர் விடுதலை கூட்டமைப்பு.

Leave a Reply