பாப்பாக்குடியில் அருந்ததிய சமூக மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

ராமநாதபுரம் பாப்பாக்குடியில் ஒடுக்கப்பட்ட அருந்ததிய சமூக மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 27-5-2019 சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும், பாதுகாப்பும் வழங்கக் கோரியும், தாக்கிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

Leave a Reply