பொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்

பொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்.

தேர்தல் வாக்குப் பதிவின் போது அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் சாதிவெறி கும்பல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சின்னமான பானையை உடைத்ததுடன், ஒடுக்கப்பட்ட மக்களின் பகுதிக்குள் நுழைந்து வீடுகளை அடித்து நொறுக்கி, அவர்களைத் தாக்கியும் உள்ளது.

இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை இன்று மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் சந்தித்தனர்.
தாக்குதல் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நிற்போம் என்ற உறுதியையும் அளித்தனர்.

Leave a Reply