திராவிடர் கழகத் தலைவர் ’ஆசிரியர்’ வீரமணி அவர்களின் கூட்டத்தில் வன்முறையில் ஈடுப்பட்ட இந்து முன்னனி குண்டர்களை கைது செய்

திராவிடர் கழகத் தலைவர் ’ஆசிரியர்’ வீரமணி அவர்களின் கூட்டத்தில் வன்முறையில் ஈடுப்பட்ட இந்து முன்னனி குண்டர்களை கைது செய்- மே பதினேழு இயக்கம்.


நேற்று திருச்சி கீரைக்கொள்ளையில் வீரமணி அவர்கள் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்து முன்னனி குண்டர்கள் செருப்பு மற்றும் கல் வீசி வன்முறையில் ஈடுப்பட்டிருக்கின்றனர். அப்பகுதியினுடைய காவல்துறை ஆய்வாளரின் ஒத்துழைப்பின் பேரிலே மேற்குறிப்பிட்ட வன்முறை சம்பவம் நடந்திருப்பதாக தோழமை இயக்கத்தினர் கருத்து தெரிவிக்கிறார்கள். இதனை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

கடந்த மார்ச் 25ந் தேதி கோவையில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து, தற்போது திருச்சி பிரச்சாரக் கூட்டத்திலும் இந்து முன்னனி குண்டர்கள் வன்முறையில் ஈடுப்பட்டிருக்கின்றனர்.
எதிர்க்கருத்துக்களை, கருத்துக்கள் மூலம் ஜனநாயகமாக எதிர்க்கொள்ள வலிமையில்லாத இந்துத்துவ கும்பல்கள், தமிழ்நாட்டை வன்முறை களமாக மாற்ற முயற்சித்துக் கொண்டுள்ளன. இதற்கு ஆளும் எடப்பாடி அரசும், தமிழக காவல்துறையும் துனைப்போகிறது.

தங்களுக்கெதிரான கருத்துக்களை வன்முறையின் மூலம் எதிர்க்கொள்ளும் பாசிச அரசியல் கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கும் இந்துத்துவ கும்பலை தமிழ்நாட்டிலிருந்து அப்புறப்படுத்த தமிழக மக்கள் முன்வர வேண்டும் என மே பதினேழு இயக்கம் அறைக்கூவல் விடுக்கிறது!

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply