பாசிச பாஜக அரசே தோழர் ஆனந்த் டெல்டும்டேவை உடனடியாக விடுதலை செய்.

RSS என்னும் பாசிச பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சி நடத்தும் காட்டாட்சியில் தொடர்ச்சியாக ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்பட்டு வருகின்றன , ஒரு புறம் காவல் துறையை கையில் வைத்துக்கொண்டும் மறுப்புறம், சங் பரிவார் கும்பல்களின் துணையோடும், நரவேட்டை ஆடிவருகின்றன.

MM.கல்புர்கி , கோவிந்த் பன்சாரே , நரேந்திர தபோல்கர் , கௌரி லங்கேஷ் உள்ளிட்ட , கல்வியாளர்களை, முற்போக்கு எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை , சங்க் பரிவார் கும்பல்களை கொண்டு பச்சை படுகொலை செய்தும்

தோழர் முகிலன், பேராசிரியர் ஜெயராமன் , தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரை சட்டத்துக்கு புறம்பாக காவல்துறையை கொண்டு கைது செய்தும் , பாசிசத்திற்கு எதிரான ஜனநாயக சக்திகளை ஒடுக்க நினைக்கிறது இந்த ஆளும் பயங்கரவாத கும்பல்.

இந்த கைதுகள் தொடர்கதையாக இருக்கின்ற இந்த சூழலில் தான் இன்று அதிகாலை 3.30 மணிக்கு மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையத்தில் புனே காவல் துறையினரால் அராஜகமாக ,அறிஞர் தோழர் ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டுள்ளார், கடந்த ஜனவரி 1 பீமா கோரேகானில் கலவரத்தை ஏற்படுத்த தலித்துகளை தூண்டியதாகவும், இந்திய பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம் தீத்தியதாகவும் அபாண்டமான வழக்குகளை பதிவு செய்துள்ளது .

ஏற்கனவே இந்த வழக்குகளில் அவரை கைது செய்யமால் பாதுக்காக்க உச்சநீதிமன்றம் வரும் பிப்ரவரி 11 தேதி வரை கால அவகாசம் தந்திருக்கும் பொது, உச்சநீதி மன்றத்தின் பாதுகாப்பை மீறி , புனே காவல் துறையினர் அராஜகமாக கைது செய்ததோடு மட்டும்மல்லாமல் UAPA பிரிவில் கைது செய்யும் முனைப்பில் உள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக தொடர்ச்சியாக , தலித் , முற்போக்கு , இடதுசாரி சிந்தனையாளர்களை , கைது செய்தும் , கொலை செய்தும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றி கொடுங்கோல் ஆட்சி புரியும் பாசிச பாஜக வை மிக வன்மையாக கண்டிக்கிறது மே பதினேழு இயக்கம்.

பாசிச பாஜக அரசே தோழர் ஆனந்த் டெல்டும்டேவை உடனடியாக விடுதலை செய்.

 

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply