செய்யாறு வட்டம் தூசி பகுதியில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை மீது தாக்குதல்

செய்யாறு வட்டம் தூசி பகுதியில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை மீது தாக்குதல் நடத்திய சாதி வெறி கும்பலை உடனடியாக கைது செய்!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் உள்ள தூசி பகுதியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலையின் மீது சாதிவெறி கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. தமிழகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி, சாதிக் கலவரத்தினை உண்டாக்கிவிடலாம் என்று சாதி வெறி கும்பல் தொடர்ச்சியாக முயன்று வருகிறது.

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என அனைத்து உழைக்கும் மக்களுக்கும் சேர்த்து உழைத்த மக்கள் தலைவர் அம்பேத்கர் அவர்களின் சிலையை சேதப்படுத்தும் சாதிவெறி கும்பலின் கீழ்த்தரமான செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

அமைதியான சமூகமான தமிழ்நாட்டில் வன்முறையை விதைத்து அதில் குளிர்காய நினைக்கும் சாதிவெறி கும்பலின் மீது மிகக் கடுமையான நடவடிக்கையினை தமிழக அரசும், காவல்துறையும் எடுக்க வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

அண்ணல் சிலை மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர்கள் அப்பகுதியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து சனநாயக சக்திகளும் கைகோர்த்து எதிர்ப்பினை வலிமைப்படுத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply