பூதூரில் அண்ணல் அம்பேத்கரின் உருவச்சிலை சமூகவிரோதிகளால் தாக்கப்பட்ததற்கு மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்

பாசிச மதவெறியும் சாதி வெறியும் கையோடு கைக்கோர்த்து உலாவும் இன்றைய காலக்கட்டத்தில் சமூகநீதியும் அதை காக்க போராடிய/ போராடும் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு இருண்ட காலமாக மாறி இருக்கிறது.

அறிவர் அண்ணல் அம்பேத்கரின் உருவச்சிலைகள் இந்த சமூக விரோத பாசிச சக்திகளாலும் சாதிவெறி மனநோயாளிகளாலும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறது.

நேற்று 29/01/2019 அன்று திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பூதூரில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் உருவச்சிலை சமூகவிரோத கும்பல்களால் தாக்கப்பட்டுள்ளது, இந்த படுபாதக செயலை மே பதினேழு இயக்கம் மிக வன்மையாக கண்டிக்கிறது.

Leave a Reply