மோடிக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் – மதுரையில் ஒன்று திரள்வோம்

ஒன்று திரள்வோம்…

மத்தியில் பிஜேபி அரசு பதவிக்கு வந்த நாள் முதலே தொடர்ந்து தமிழின விரோதத்தோடு செயல்பட்டு வருகிறது. ஒக்கிபுயலில் காணாமல் போனவர்களை மீட்காமல் இருந்ததும், காஜா புயல் நிவாரணத்திற்கு பிச்சைக்காசு போடுவதைப் போல புறக்கணித்ததும், சட்டவிரோதமாக கர்நாடக அரசு காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி கொடுத்ததும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை குருவி சுடுவதுபோல சுட்டுத்தள்ளியதுமாக தொடர்ந்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது.

இது போதாக்குறைக்கு ஏற்கனவே இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதியால் மேம்பட்டவர்கள் என்று மத்திய மாநில அரசுகளின் உயர் பதவிகளை அனுபவித்துவரும் பார்ப்பனர்களுக்கு மேலும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை அரசியலமைப்பு சட்டத்தை மீறி வழங்கும் உத்தரவை வழங்கியிருக்கிற மோடி அரசை கண்டித்தும், மோடியே திரும்பிப்போ என்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக மதுரையில் வரும் 27ம் தேதி நடைபெற இருக்கிறது.

இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு தமிழர்களின் ஒற்றுமையை மத்தியில் ஆட்சியில் இருக்கிற ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் .

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

Leave a Reply