தமிழீழ விடுதலை மற்றும் தமிழின உரிமை மீட்புக்கு போராடிய வழக்கிற்கு தோழர் திருமுருகன் மற்றும் தோழர் பிரவீன் நீதிமன்றம் வருகை

தமிழீழ விடுதலை மற்றும் தமிழின உரிமை மீட்புக்கு போராடியதற்காக அடக்குமுறை அரசுகளால் போடப்பட்ட 5 வழக்குகளின் விசாரணை இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் வந்தது. இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொள்வதற்காக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் பிரவீன் குமார் உள்ளிட்ட தோழர்கள் இன்று (24.01.19) வியாழக்கிழமை நீதிமன்றத்திற்க்கு வருகை தந்தனர்.

வழக்கு விபரம்:

1.காவிரி உரிமைக்காக சாஸ்திரி பவன் முற்றுகை.

2.காவிரி விவகாரத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது அதனை எதிர்த்து சாஸ்திரி பவன் முற்றுகை.

3.பணமதிப்பு இழப்பீடு எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

4.இலங்கை தூதுரக முற்றுகை.

5.காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து காமன்வெலத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

இப்படியெல்லாம் வழக்குகள் போட்டு எங்களின் தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தையோ, தமிழ்நாட்டின் உரிமைகளுக்கான போராட்டத்தையோ ஒருபோதும் அரசுகளால் முடக்கிவிட முடியாது. தொடர்ந்து போராடுவோம்

Leave a Reply