லயோலா கல்லூரியின் மீது பாசிச பிஜேபி அரசின் தாக்குதலுக்கு மே பதினேழு இயக்கம் வன்மையான கண்டனம்

லயோலா கல்லூரியின் மீது பாசிச பிஜேபி அரசின் தாக்குதலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

கடந்த சனிக்கிழமை 19.01.2019 அன்று சென்னை லயோலா கல்லூரியில் நடந்த கலைவிழாவில் இந்தியாவில் அண்மையில் நடைபெற்று வருகின்ற சமூக அவலங்களை விளக்கும் விதமாக ஓவியர் முகிலன் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து பார்ப்பன பாசிச பிஜேபி கும்பல்கள் லயோலோ கல்லூரியையே மூட வேண்டும் என்று வெறிகொண்டு கூச்சலிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு கலைஞன் என்பவன் தன்னைச் சுற்றி நடக்கும் சமூக அவலங்களை தனக்கு வாய்க்கப்பெற்ற கலையின் மூலம் வெளிப்படுத்துவதே உண்மையான சமூக அக்கறை. அந்த விதத்தில் தோழர் முகிலன் தனது சமூக அக்கறையை தனது ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். இத்தனைக்கும் அவர் தவறாக ஆதாரமில்லாமல் எதையும் வரையவில்லை. பத்திரிக்கையாளர் கௌரி லங்கேசை சுட்டுக் கொன்றது இந்துத்துவ கும்பல் தான் என்று விசாரணையில் ஏற்கனவே தெரியவந்திருக்கிறது. அதேபோல சபரிமலையில் பெண்கள் நுழையலாம் என்று இந்திய உச்சநீதிமன்றம்தான் தீர்ப்பளித்திருக்கிறது.மேலும் அரசியலமைப்பு சட்டத்தில் இல்லாத வகையில் உயர்சாதி பார்ப்பனர்களுக்கு பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீட்டை அரசியலமைப்பையே மீறி மோடி அறிவித்திருக்கிறார். இப்படி நடந்த நடந்துகொண்டிருக்கின்ற உண்மைகளை தான் அவர் படமாக வரைந்து இருக்கிறார்.

அப்படி இருக்கும் பொழுது எங்கே இந்த உண்மைகள் மக்கள் மத்தியில் பரவி ஆளும் பிஜேபி அரசின் குட்டும், அதை இயக்குகிற இந்துத்துவக் கும்பல்களின் குட்டும் வெளிப்பட்டுவிடுமோ என்று பயந்து எச் ராஜா நாராயணன் போன்ற பார்ப்பன வெறி கும்பல்கள் காட்டுக்கத்தல் கத்தி கொண்டிருக்கிறார்கள். இதனை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

மேலும் இந்த பாசிச கும்பல்கள் லயோலா கல்லூரி கலை விழாவில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு பேசி இருக்கிறார் என்பதையும் சுட்டிக்காட்டி காவல்துறையினரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் தனக்கு எதிராக எதிர்க்கருத்து பேசுவர்கள் அனைவரையும் முடக்க வேண்டுமென்ற பாசிச சித்தாந்தத்தின் படி தான் பிஜேபியும் அதை இயக்கும் ஆர்எஸ்எஸ் கும்பலும் செயல்படுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது.

பிஜேபி அரசின் இந்த பாசிச நடவடிக்கை என்பது பெரியார் பிறந்த தமிழ் நாட்டில் ஒருநாளும் எடுபடாது என்பதையும், அதையும் மீறி இந்த பாசிச நடவடிக்கைகளில் பார்ப்பன பிஜேபி கும்பல்கள் தொடர்ந்து ஈடுபடுமேயானால் இன்று லயோலா கல்லூரியில் நடந்ததை போல தமிழக்மெங்குமுள்ள அனைத்து கல்லூரிகளிலும் இதேபோன்ற விழாவினை தமிழகத்திலுள்ள முற்போக்கு சனநாயக சக்திகள் இணைந்து நடத்தி பார்ப்பன பாசிச கும்பலுக்கு பாடம் புகட்டுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply