உயர் சாதிக்கான 10% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

எந்தவித ஆய்வுமில்லாமல், அரசியல் சட்டத்தினை மீறி 2000 ஆண்டுகளாக சலுகை அனுபவித்து வரும் உயர் சாதிக்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ் ஆலோசனை பேரில் அறிவித்திருக்கும் மோடி அரசை கண்டித்தும், உடனடியாக உயர்சாதிகளுக்கு வழங்கியிருக்கிற 10% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரியும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்த்து மே 17 இயக்கம் நாளை சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது.

ஒருவேளை நாம் இந்த உயர்சாதிகளுக்கான 10% இட ஒதுக்கீட்டை எதிர்க்காமல் விட்டோம் என்றால் நாளை இதே அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்துவரும் இட ஒதுக்கீட்டிலும் பொருளாதார ரீதியில் பிரித்து ஒரு கட்டத்தில் இட ஒதுக்கீடு என்பதையே முற்றிலுமாக அழித்து விடுவார்கள்.

விஷம் பரவுவதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் இல்லையென்றால் அது அனைத்து இடத்திலும் பரவி வாழ்வையே கேள்விக்குறி ஆக்கிவிடுமென்பதற்காகத்தான் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை மே 17 இயக்கம் ஒழுங்கு செய்திருக்கிறது. ஆகவே அனைத்து தோழர்களும் அவசியமாக இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply