உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்

- in அறிக்கைகள்​, மே 17

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

சங்க கால தமிழர்களின் மதச்சார்பற்ற, சமத்துவ பண்பாட்டினை பறைசாற்றும் விழாவாக பொங்கல் விழா இருக்கிறது.

வேளாண்மையினையும், இயற்கையினையும் போற்றிக் கொண்டாடுகிற மாந்த நேய தமிழர் திருநாளினை தமிழர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்கள் கஜா புயலினால் நிலைகுலைந்து போயுள்ளன. தமிழக விவசாயிகளின் வாழ்வு இயற்கை பேரழிவுகளாலும், இந்திய அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளாலும் கேள்விக்குறியாகி உள்ளது. கஜா புயல் இழப்பீட்டிற்காக தமிழக அரசு கேட்ட தொகையில் 10 சதவீதத்தைக் கூட இந்திய அரசு ஒதுக்கவில்லை. இந்த நேரத்தில் விவசாயிகளுக்கு உறுதுணையாக நிற்க வேண்டியது தமிழர்கள் அறைவரின் கடமையாகும்.

விவசாயத்தினையும், உணவுச் சந்தையினையும் கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைக்கும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக, தற்சார்பு தமிழ்நாட்டினை மீட்டெடுக்க இந்த பொங்கல் நாளில் உறுதி கொள்வோம்.

சாதி, மதங்களை மறுத்து, பாசிச இந்துத்துவ திணிப்புகளுக்கு எதிராக தமிழராய் இணைந்து நின்று தமிழர் திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply