நிமிர் பதிப்பகத்தின் சமகால அரசியல் ஆய்வு நூல் வரிசை – மெட்ராஸ் பஞ்சம் – அன்று முதல் இன்று வரை

மெட்ராஸ் பஞ்சம் – அன்று முதல் இன்று வரை

நிமிர் பதிப்பகத்தின் சமகால அரசியல் ஆய்வு நூல் வரிசை 

மெட்ராஸ் பஞ்சம் என்று வரலாற்றில் சொல்லப்படும் தாது வருடப் பஞ்சம் (1876-1879) 
வெறும் இயற்கைப் பேரழிவல்ல. அது வெள்ளை ஏகாதிபத்திய அரசின் பச்சைப் படுகொலை என்பதை இந்நூல் வரலாற்று ஆய்வுகளின்படி பேசுகிறது.

வறட்சி, பஞ்சம் இந்த இரண்டு வார்த்தைகளும் நம்மால் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. வறட்சி மற்றும் பஞ்சம் என்ற இரண்டு வார்த்தைகளுக்கு இடையிலான அரசியல் வேறுபாட்டினை இந்நூல் விளக்குகிறது.

தமிழர்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது உலகம் முழுவதும், பிரிடிஷ் இந்திய அரசு உணவை ஏற்றுமதி செய்தது என பல அரிய தகவல்களோடு, இன்று உலக வர்த்தகக் கழகத்தோடு கைக்குலுக்கும் மத்திய அரசு இன்னொரு பஞ்சத்தை நோக்கி நம்மை தள்ளிக் கொண்டிருக்கிறது என தமிழர்களுக்கு உணர்த்தும் மிக முக்கியமான நூல் இது.

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி வருகைக்கு முன்பும் பின்பும் இந்தியப் பொருளாதாரம் எப்படி இருந்தது, உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு என்னவாக இருந்தது, தற்போது WTOவில் இந்தியா போடும் ஒப்பந்தம் வரை அலசி ஆராய்கிறது இந்த சிறு நூல்.

எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டி வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஆவணம்.

நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில் நிமிர் அரங்கில் ( அரங்கு எண் 13 மற்றும் 14) கிடைக்கும்.

Leave a Reply