மூத்த பத்திரிகையாளர் மோகன் அவர்களின் மறைவுக்கு மே 17 இயக்கம் வீரவணக்கம்

மூத்த பத்திரிகையாளர் மோகன் அவர்களின் மறைவுக்கு மே 17 இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.

தமிழ்தேசிய ஆர்வலரும் பல்வேறு முன்னணி பத்திரிகைகளில் உயர் பதவிகளில் பணிபுரிந்தவருமான அன்புக்குரிய தோழர் மோகன் அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னால் மாரடைப்பால் இறந்துவிட்டார்.

அய்யா நல்லகண்ணு, முனைவர் தோழர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய நட்பில் இருந்தவர். தமிழ் தேசிய போராட்ட களத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர், தமிழக வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதையும், தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் திட்டமிட்டு நசுக்கப்படுவதையும் மிகக்கடுமையாக தனது எழுத்தின் மூலமும் தனது செயல்பாட்டின் மூலமும் எதிர்த்தவர்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சிறையில் அடைக்கப்பட்டபொழுது தோழருக்கு ஆதரவாகவும், அரச பயங்கரவாதத்தை எதிர்த்தும் தனது ஜனநாயக குரலை தயங்காமல் எழுப்பியவர்.

அதேபோல மே 17 இயக்கத்தின் செயல்பாடுகள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த தோழர். அவரது இந்த திடீர் இழப்பு தமிழகத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அன்னாருக்கு மே 17 இயக்கம் தனது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.

மே17 இயக்கம்
9884072010

 

Leave a Reply