கீழ்வெண்மனி தியாகிகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்

கீழ்வெண்மணி படுகொலையின் 50வது ஆண்டு நினைவு நாள் இன்று. கீழ்வெண்மனி தியாகிகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்.

அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டு செங்கொடி ஏந்தி போராடியதற்காக, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் கீழ்வெண்மணி கிராமத்தில் 44 ஒடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களை, சாதிய பண்ணையார் கும்பல் கோபாலகிருஷ்ண நாயுடு என்பவன் தலைமையில், எரித்து படுகொலை செய்தது.

சாதியினை ஒழிக்காமல், வர்க்கப் பிரிவினை களைந்திடாமல் சமூக மாற்றம் இல்லை என்பதை எடுத்துக் காட்டிய மிகப் பெரும் கருப்பு நாளாக டிசம்பர் 25 என்ற நாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் நிற்கிறது.

கீழ்வெண்மணி தியாகிகளுக்கு மே பதினேழு இயக்கம் தனது வீரவணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply