ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி மதிமுக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை – மே பதினேழு இயக்கம் பங்கேற்பு

ஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தலைமையில் 03-12-2018 அன்று நடைபெற்றது.
இதில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி, பிரவீன் குமார் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Leave a Reply