ஆணவக்கொலைக்கு எதிர்க்குரல் ! கொல்லப்பட்ட நந்தீஸ்- சுவாதி இணையருக்கு அஞ்சலி

- in சாதி

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வரவும், கொல்லப்பட்ட நந்தீஸ்- சுவாதி இணையருக்கு அஞ்சலி கூட்டமும் சென்னை அசோக் நகர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் திடலில் நாளை( 02.12.18) மாலை 4மணிக்கு நடைபெறுகிறது.

தமிழகத்தின் அனைத்து முற்போக்கு சக்திகளையும் இணைத்து சங்கர் சமூகநீதி அறக்கட்டளை இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. இதில் மே17 இயக்கத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்கிறார்.

அன்பும் மனிதநேயமுமே பெரிது என்று சாதிவெறிக் கூட்டத்திற்குச் சொல்லவும், சாதி ஆணவக்கொலைக்கு எதிராக தமிழகமே திரண்டு நிற்கிறது என்பதை அரசுக்கு உணர்த்தவும் குடும்பம் குடும்பாக அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply