டெல்டாவில் மீண்டும் கனமழை பொழியத் துவங்கியிருக்கிறது

- in கஜா புயல்

டெல்டாவில் மீண்டும் கனமழை பொழியத் துவங்கியிருக்கிறது.
புயலால் நொறுங்கிப் போன வீடுகளில் வசிக்கும் மக்களின் நிலை மழையால் இன்னும் மோசமாகும் நிலையிருக்கிறது.
கூரைகளுக்கான தார்ப்பாய்கள் மிகச் சொற்ப எண்ணிக்கையிலேயே மீதம் கையிருப்பில் உள்ளன. அவற்றை மே பதினேழு இயக்கத் தோழர்கள் வேதாரண்யம் அருகில், அதிகமாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கி வருகிறார்கள்.
மழையிலிருந்து மக்கள் தங்களையும், தங்கள் உடமைகளையும் காத்துக் கொள்ள தார்பாய்கள், போர்வைகள் போன்றவையே பெரும்பாலான கிராமங்களின் முக்கியத் தேவையாக இருக்கிறது. வாங்கித் தந்து அனுப்ப முடிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்: 7094198005 | 9884072030

Leave a Reply