கஜா புயலில் சிதைக்கப்பட்ட தேனீ நடுநிலைப் பள்ளி

- in கஜா புயல்

கஜா புயலில் சிதைக்கப்பட்ட தேனீ நடுநிலைப் பள்ளி.

வேதாரண்யம் அருகே மருதூர், ராசாபுரம் பகுதியில் உள்ள தேனீ நடுநிலைப் பள்ளியில் உள்ள 3 கட்டிடங்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இந்த பள்ளியில் 220 குழந்தைகள் வரை படிக்கின்றனர்.

மாணவர்களுக்கான நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தும் சிதைந்திருக்கின்றன. அரசு உதவி பெறும் பள்ளியான இப்பள்ளியினை மீட்டெடுப்பது நம் அனைவரின் கடமையாகும்.

புயலின் பாதிப்பிலிருந்து சிறிதளவு கூட மக்கள் மீளாத நிலையில் நாளை பள்ளிகள் திறக்கும் என்று அரசு அறிவித்திருக்கிறது.

அரசு உதவி பெறும் பள்ளி என்பதால் இப்பள்ளியினை சீரமைக்கும் பணியினை அரசு பொறுப்பேற்காது என்று அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தார்கள். சிதைந்து போன பள்ளியை மீட்கும் பொறுப்பைக் கூட அரசு ஏற்காவிட்டால் வேறு எதனை ஏற்கப் போகிறது.

இந்த பள்ளியினை உடனடியாக சீரமைத்து புதுப்பித்து தந்து, மாணவர்களின் கல்வி எதிர்காலத்தைக் காத்திட வேண்டும் என தமிழக அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மேலும் இப்பள்ளியினை மீட்பதற்கு தோழர்கள் அனைவரும் நம்மால் இயன்ற உதவிகளை இணைந்து அளித்திட வேண்டும்.

– மே பதினேழு இயக்கம்
7094198005 | 9884072030
#SaveDelta

Leave a Reply