இரவு நேரத்தின் போதும் தொடரும் மே பதினேழு இயக்கத் தோழர்களின் நிவாரணப்பணி

- in கஜா புயல்

இப்படி ஒரு அரசை வைத்துக் கொண்டு, இன்னும் எத்தனை ஆயிரம் பேரை இணைத்திட்டால் டெல்டா மக்களின் அடிப்படையை பூர்த்தி செய்ய முடியும் என தெரியவில்லை.

திருத்துறைப்பூண்டி உள்ளே செல்லும் கிராமங்கள் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ஏராளமான வீடுகள் முற்றிலுமாய் சரிந்து போயுள்ளன. கஜா புயல் பேரிடர் என்பது நம்முடைய தலைமுறையில் நிகழ்ந்திருக்கும் மிகப்பெரும் பேரழிவு. இதனை சாதாரண இடர் நிகழ்வினைப் போல கடந்து செல்ல தமிழக அதிமுக அரசும், பாஜக அரசும் முயற்சித்து வருகிறது.

அரசின் அலட்சியத்தினைக் கேள்விக்குள்ளாக்கும் அதே நேரத்தில் நம் மக்களை இந்த நிலையில் விட்டுவிட்டு கடக்க முடியாது.

இரவு நேரத்தின் போதும் மே பதினேழு இயக்கத் தோழர்களின் நிவாரணப்பணி தொடர்ந்து வருகிறது.

டெல்டாவினை மீட்டெடுக்க பெருமளவில் கைகோர்த்திடுவோம்.
நிவாரணப் பொருட்கள் அல்லது நிதி அளித்திட தொடர்புக்கு: 7094198005 | 9884072030

#SaveDelta

Leave a Reply