டெல்டா மக்களுக்கு கைகொடுப்போம்

கஜா புயலால் தமிழினம் பேரழிவைச் சந்தித்துள்ளது. கனத்த மெளனத்தோடு தமிழகம் அதை கடந்து கொண்டிருக்கிறதோ எனும் வருத்தம் வருகிறது. சென்னை, கேரளா வெள்ளத்தின் பொழுது எழுந்த மனித நேயம், தற்போதும் எழ வேண்டும்.

கடந்த வருடம் ஒக்கிப் புயலில் மீனவரை இழந்தோம், தற்போது டெல்டா விவசாயிகளை இழக்கிறோம்.

நாம் பேசுவதற்கு பலவிடயங்கள் இருக்கலாம். ஆனால் நம்முடைய கவனமும், அக்கறையும், அன்பும் டெல்டா மாவட்ட மக்களுக்கு தேவைப்படுகிறது.

அறிவிப்பு செய்து இரண்டு நாட்களுக்கு மேலாகியும்,
பரந்துபட்ட மக்களுக்கு கொண்டு செல்லுமளவிற்கு போதிய அளவில் நிவாரணப் பொருட்கள் கிடைக்கவில்லை. ஓரிரு கிராமங்களுக்கு அனுப்புமளவிலேயே நிவாரணப்பொருட்கள் கிடைத்திருக்கின்றன. இன்றும் நாளையும் அவை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கப்படும்.

டெல்டா மாவட்ட கிராமங்கள் முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில், நிவாரணப்பணி உதவியில் பெருமளவிலான மக்கள் பங்கெடுத்தால் மட்டுமே குறைந்தபட்ச பங்களிப்பாவது சாத்தியமாகும்.

நிவாரணப்பணிகளுக்கான உதவிப்பொருட்களை கொடுக்க விரும்பும் தோழர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும். 9884072030 , 7094198005.

#SaveDELTA

Leave a Reply