தமிழ்த்தேசியப் போராட்டக்காரரும், இயக்குநர் வ.கெளதமன் அவர்களின் தந்தையுமான ஐயா வடமலை அவர்கள் உயிர் நீத்தார்

- in ஈழ விடுதலை

தமிழ்த்தேசியப் போராட்டக்காரரும், இயக்குநர் வ.கெளதமன் அவர்களின் தந்தையுமான ஐயா வடமலை அவர்கள் நேற்று (20-11-2018) உயிர் நீத்தார்.

ஐயா வடமலை அவர்கள் தமிழ்த்தேசிய போராளிகளான தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் உள்ளிட்டோருடன் இணைந்து தமிழ்த்தேசிய போராட்டங்களில் பங்காற்றியவர்.

மே பதினேழு இயக்கம் சென்னையில் ஒருங்கிணைக்கும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் தனது வயதான காலத்திலும் வந்து கலந்து கொண்டு வாழ்த்திவிட்டு செல்வார்.

ஐயாவிற்கு மே பதினேழு இயக்கம் தனது புகழ் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்த்தேசிய போராட்டக்காரரும், இயக்குநர் கெளதமன் அவர்களின் தந்தையுமான ஐயா வடமலை அவர்களின் இறுதி நிகழ்வு திட்டக்குடியில் இன்று நடைபெற்றது(21-11-2018). மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் ஐயாவிற்கு இறுதி மரியாதையினை செலுத்தினர்.

ஐயா வடமலை அவர்கள் தமிழ்த்தேசிய போராளிகளான தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் ஆகியோருக்கு நெருக்கமாக பணியாற்றியவர்.

 

Leave a Reply