ஏழு நிரபராதித் தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மிதிவண்டி பேரணி

ஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி சிவகங்கை முதல் சென்னை ஆளுநர் மாளிகை வரை மிதிவண்டி பேரணியைநடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஏழு தோழர்களும் இன்று(19-11-2018) சென்னை ஆளுநர் மாளிகை அருகில் வந்தடைந்தனர்.

அவர்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் முன்னிலையில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் பிரதிநிதிகளும், தோழர்களும் திரண்டு நின்று வரவேற்றனர்.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்று ஏழ்வருக்கும் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்தார்.

ஏழு தமிழரையும் தாமதமின்றி உடனடியாகவிடுதலை செய்ய வேண்டும் என்று அனைவரும் முழக்கமிட்டனர்.

Leave a Reply