திருமுருகன் காந்தி மீது மீண்டும் வழக்கு பதிவு! சிறைக்குப் பின்னரும் அடக்குமுறையை தொடரும் அரசு!

திருமுருகன் காந்தி மீது மீண்டும் வழக்கு பதிவு! சிறைக்குப் பின்னரும் அடக்குமுறையை தொடரும் அரசு!

கடந்த ஏப்ரல் மாதம் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியினை எதிர்த்து, போராட்டம் நடத்தியதாக தோழர் திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு செய்து இன்று(17-11-2018) சம்மன் அனுப்பியிருக்கிறது காவல்துறை.

ஸ்டெர்லைட் படுகொலையை ஐ.நாவில் பேசியதாக, ஆகஸ்ட் 9ம் தேதி திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு ஏராளமான வழக்குகள் பதியப்பட்டு, ஒவ்வொரு வழக்காக பிணை பெற்று 55 நாட்கள் கழித்து விடுதலையானார்.

சிறையிலிருந்து வெளிவந்து 16 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன்பின்னர் கடந்த ஒரு மாத காலமாக Condition Bail காரணமாக, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தினந்தோறும் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற போராட்டத்திற்கு இன்று சம்மன் அனுப்பியிருக்கிறது தமிழக அரசு.

சாதி ஆணவப் படுகொலைகளையும், ஒடுக்கப்பட்ட சமூக பெண்கள் மீதான தாக்குதல்களையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத இந்த அரசுதான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினைக் காக்க போராடியதாக வழக்கு பதிவு செய்கிறது என்றால், இந்திய அரசும், தமிழக அரசும் சாதி வெறிக்கு துணைபோகிறதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது.

சிறைக்குப் பின்னரும் மே பதினேழு இயக்கம் சமரசமின்றி நிற்பதால், மேலும் அடக்குமுறையை தொடர்ச்சியாக அரசு ஏவிவருகிறது. இந்த அடக்குமுறைகளையெல்லாம் சட்டரீதியாகவும், மக்கள் துணையோடும் எதிர்கொண்டு மே பதினேழு இயக்கம் தொடர்ந்து சமரசமின்றி இயங்கும் என்பதை மோடி அரசுக்கும், எடப்பாடி அரசுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply