பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாணவி வளர்மதி, மகாலட்சுமி, வேடியப்பன். ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது – மே 17 இயக்கம் கண்டனம்

13-11-2018 அன்று அரூரில் மாணவி செளமியா கொலையில் உண்மை அறியச் சென்ற பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாணவி வளர்மதி, மகாலட்சுமி, வேடியப்பன். ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உண்மை அறியவிடாமல் தடுத்து அராஜகம் செய்த அதிமுகவினரை கைது செய்யாமல், உண்மை அறிய சென்றவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. மாணவி செளமியாவின் பெற்றோர் கொடுத்த வழக்கினை எடுக்க முடியாது என்று சொல்லி, குற்றவாளிகளை காவல்துறையினர் காப்பற்ற முயன்ற விடயம் வெளியில் வந்து விடக் கூடாது என்ற நோக்கத்திலேயே காவல்துறையினர் இச்செயலில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.

மாணவியின் பெற்றோரிடம் அமைதியாக விளக்கம் கேட்டுக் கொண்டிருந்த தோழர்களை, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தார்கள் என்று சொல்லி காவல்துறை பொய்வழக்கினை போட்டு கைது செய்திருக்கிறது.

தோழர்கள் நால்வருக்கும் தற்போது பிணை கிடைத்துள்ளதாக தகவல்கள் வருகிறது. அராஜகத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீதும், மாணவி செளமியாவின் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு துணை போன காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நான்கு தோழர்கள் மீதும் போடப்பட்ட பொய் வழக்கினை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply