சுயநல தமிழக அரசும், வஞ்சக மோடி அரசும் தமிழர்களுக்கு செய்யும் துரோகம்

- in பரப்புரை

சுயநல தமிழக அரசும், வஞ்சக மோடி அரசும் தமிழர்களுக்கு செய்யும் துரோகம்

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தீடிரென்று 5மணி நேரம் 6மணி நேரமென்று அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. ஏன் இப்படி மின்வெட்டு ஏற்படுகிறதென்று அரசு வெளிப்படையாக அறிவிக்காத நிலையில் கடந்த மாதம் செப்டம்பர் 13ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதாவது தமிழகத்திற்கு வழக்கமாக வழங்கி வரும் நிலக்கரி அளவை தீடிரென்று பெருமளவு மத்திய அரசு குறைத்து விட்டது. இதனால் தமிழகத்தில் மின்சார உற்பத்தி அடியோடு நின்றுபோய் இன்னும் மூன்று நாட்களில் தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே தமிழகத்திற்கு இதுவரை நாளொன்றுக்கு கொடுத்து வந்த 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை தொடர்ந்து கிடைக்க வழிவகை செய்யவேண்டுமென்று கூறியிருந்தார். ஆக மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் தான் தமிழகத்திற்கு மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது என்பது இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.பின் மின்துறை அமைச்சர் தங்கமணி டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்தார். அதன்பின் தற்பொது மின்வெட்டு இல்லை.

சரி மின்வெட்டு தான் இல்லையே ஒருவேளை நிலக்கரி அளவை மத்திய அரசு உயர்த்தி கொடுத்து விட்டதோ என்று பார்த்தால் அதில் தான் மத்திய அரசின் வஞ்சகம் இருக்கிறது. அதாவது 20 வேகன்களில் நிலக்கரி கொடுத்து வந்த மத்திய அரசு தீடிரென்று 6 அல்லது 7 வேகன்கள் மட்டுமே கொடுத்தது. இதைதான் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் மூலம் அதிகப்படுத்தி கேட்டார். உடனே மத்திய அரசு இரண்டு வேகன்கள் அதிகபடுத்தி 9 வேகன்கள் கொடுத்ததே ஒழிய தேவையான அளவில் பாதி்கூட கொடுக்க முன்வரவில்லை. இதை அதிகபடுத்த வேண்டுமென்று தான் அமைச்சர் தங்கமணி டெல்லி சென்றார்.

ஆனால் அதன் பிறகு மாநில அரசு மூன்று தனியாரிடமிருந்து கிட்டதட்ட 150% மிக அதிக விலைக்கு நிலக்கரியை வாங்கி தற்போதைய சூழலை சமாளித்து வருகிறது. அதாவது ஒரு டன் நிலக்கரி 2000ரூபாய்க்கு வாங்கி வந்த தமிழக அரசு தற்போது.

அதானி குழுமத்திடம் ஒரு டன் :5,008.45க்கும்,
ஸ்ரீ ராயலசீமா நிறுவனத்திடம் ஒரு டன் :4,936.25க்கும்,
யாசீன் இம்பெக்ஸ் நிறுவனத்திடம் ஒரு டன்: 5098க்கும்

அதிக விலைக்கு நிலக்கரியை கொள்முதல் செய்து தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு ஒரு நாளைக்கு 33கோடி கூடுதல் செலவை இழுத்து வைத்திருக்கிறது. தமிழகத்தின் அவசரத்தை தெரிந்துகொண்ட தனியார் நிறுவனங்களும் இதுதான் நேரமென்று விலையை தறுமாறாக உயர்த்தி வழங்கி வருகிறது. இப்படி தனியாரிடம் நிலக்கரியோ அல்லது மின்சாரமோ வாங்க வேண்டுமென்றால் முதலில் மின்சார ஒழுங்காற்று வாரியத்திடம் அனுமதி வாங்க வேண்டுமென்று இருந்த விதியை மத்திய அரசு தளர்த்தியிருக்கிறது. ஆக தமிழக அரசு தனியாரிடம் அதுவும் மோடிக்கு வேண்டிய அதானியிடம் நிலக்கரியை அதிகவிலைக்கு வாங்க வேண்டுமென்பதற்காகவே நிலக்கரி அளவை குறைத்து கொடுத்தோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

மேலும் 1956லிருந்து தமிழக மக்களுக்கு சொந்தமான நெய்வேலியிலிருந்து நிலக்கரியை நமக்கு தண்ணீர் தரமறுக்கும் கர்நாடக உட்பட பலருக்கும் வாரி வழங்கி வருகிறது இந்தியா. ஆனால் தமிழகத்த்ற்கு இப்போது நிலக்கரி தட்டுபாடு இருக்கிறதே அதுவும் மிக அதிகவிலைக்கு வாங்குகிறார்களே அதனால் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலிருந்து கூடுதலாக தமிழகத்திற்கு கொடுப்போமென்று இல்லாமல். ஒரிசாவிலும் ஜார்கண்டிலும் அமையபோகிற புதிய அனல் மின் நிலையத்திற்கு இங்கிருந்து நிலக்கரி கொடுக்க 10 நாட்களுக்கு முன் ஒப்பந்தத்தை போட்டிருக்கிறது மத்திய அரசு. இப்படி மத்திய ஒரு தமிழகத்திற்கு தூரோகம் செய்கிறதென்றால்

இதையெல்லாம் தட்டிகேட்கவேண்டிய தற்போது தமிழகத்திலிருக்கிற மாநில அரசோ இதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் இதில் எவ்வளவு கமிசன் பார்க்கலாமென்று தனியார் சொல்லும் கூடுதல் விலைக்கே நிலக்கரி வாங்குவதும் , டெண்டர் முறையை மத்திய அரசு நீக்கியிருப்பதால் இதுதான் சமயமென்று வெளிநாடுகளிலிருந்து 30லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்யும் முடிவை தமிழக அரசு எடுத்து ஓப்பந்தமும் போடப்பட்டுவிட்டது. நெய்வேலியில் நமக்கு உரித்தான உரிமையை கேட்டு வாங்காமல் மத்திய அரசின் எடுப்பாக இருந்துகொண்டு தனது பதவி சுயநலத்திற்காக எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு தமிழர்களுக்கு இப்படிப்பட்ட துரோகத்தை செய்கிறது.

இப்படி மத்திய, மாநில அரசுகளின் துரோகத்தால் ஏற்கனவே கடன்சுமையில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக மின்சார வாரியம் இன்னும் சில வருடங்களில் மீளாத கடன் சுமையில் தவிக்கபோகிறது என்பது மட்டும் உண்மை. இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் உடனே மின்சாரவாரியத்தை தனியாருக்கு கொடுப்பார்கள் இல்லையென்றால் மின்சார வாரியத்தின் கடன் சுமையை மக்களாகிய நம் மீது சுமத்துவார்கள். இப்படிப்பட்ட நிலைமை வராமல் தடுக்க நாம் உடனடியாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக போராட முன்வரவேண்டும்.

Leave a Reply