மோடி வாங்கிய ஐ.நா விருதும் உண்மையும்

- in பரப்புரை

மோடி வாங்கிய ஐ.நா விருதும் உண்மையும்

ஐக்கிய நாடுகளின் சபையின் சுற்றுச்சூழல் நிர்வாகம் United Nations Environment Programme (UNEP) கடந்த வாரம் அதாவது அக்டோபர் 03ஆம் தேதி சிறந்த சுற்றுச்சூழல் விருதை மோடிக்கும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானுக்கும் வழங்கியிருக்கிறது.

உலகளவில் 180நாடுகளுள்ள சுற்றுச்சூழல் தரவரிசையில் பட்டியலில் (Environmental Performance Index 2018) 177ஆவது இடத்தில் இந்தியாவுள்ளது. இவ்வளவு மோசமான சுற்றுச்சூழலை பேணுகிற ஒரு நாட்டின் பிரதமருக்கு ஐநா ஏன் விருது கொடுத்ததென்று உலகளவில் சுற்றுச்சூழல் ஆர்வலளர்கள் பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர். மேலும் இந்த விருதுக்கு உண்மையிலேயே இந்திய பிரதமர் மோடி பொருத்தமானவர் தானா என்றால் தமாதிக்காமல் உடனே சொல்லலாம் இல்லை என்று. ஏனென்றால்

இந்த விருதை வாங்கப்போகிற அன்று தான் இந்தியாவில் வாரணாசி கங்கை கரையிலிருக்கிற ஒரே ஒரு ஆமை சரணாயலத்தை தனியார் முதலாளியின் மின்சாரம் தயாரிக்கும் ஆலைக்கு இடைஞ்சலாக இருக்கிறதென்று சொல்லி மூடும் உத்தரவை பிறப்பித்தார். பார்க்க படம்01. அதோடு அவர் ஆட்சி பொறுப்பேற்ற பின் சுற்றுப்புறச்சூழலை அழிக்கும் பல்வேறு வகையான சட்டத்திருத்ததை தனியார் மற்றும் பன்னாட்டு முதலாளிகளுக்காக கொண்டு வந்தார். உதாரணாமாக

1.காடுகளிலுள்ள இயற்கை வளங்களை கொள்ளையடிக்க ஏதுவாக புதிய ’தேசிய வன பாதுகாப்பு சட்ட வரைவை’ கொண்டுவந்தார். (Draft National Forest Policy)

2.கடற்கரையை பெரும் முதலாளிகளுக்கு விற்க ’கடற்கரை பாதுகாப்பு பகுதி’ coastal regulation zone (CRZ) என்ற பெயரில் மீனவர்களை விரட்டும் புதிய சட்டத்தினை கொண்டுவந்தார்.

இப்படி பல சட்டங்களை தனியார் பெரும் முதலாளிகள் தொழிற்சாலைகளை நிறுவதற்காக கொண்டு வந்ததன் விளைவாக இந்தியாவில் காடுகள், மலைகள், நீர்நிலைகள் எல்லாம் மிக வேகமாக அழிக்கப்பட்டுவருகின்றன. இந்திய சுற்றுச்சூழல் சட்டம் 1972இன் படி பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று தொழிற்சாலைகளும் அதற்கு தேவையான சாலை போக்குவரத்துகளும், விமான ஓடுதளமும், மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களும் அமைக்க மோடி அரசு உத்தரவிட்டிருக்கிறது. பார்க்க படம் 02 & 03.

இப்படியாக மோடி அரசு பதவியேற்ற 2014-2018 காலகட்டத்தில் மட்டும் 519 திட்டங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன என தேசிய வனவிலங்கு காப்பகத்தின் Standing Committee of the National Board for Wildlife (SC-NBWL) 40ஆவது கூட்டத்தொடரில் தெரிவித்திருக்கிறது.

இவ்வளவு மோசமாக காடு, கடல், நீர்நிலைகளை இவைகளை அழித்த ஒருவருக்கு தான் ஐநா விருது கொடுத்து கவுரப்படுத்துகிறது. இந்த விருதை மோடிக்கு வழங்கியிருக்கும் ஐநா சுற்றுசூழல் நிர்வாகத்தின் தலைவர் ஐரோப்பிய ஒன்றியமான நார்வேயை சேர்ந்த எரிக் சோல்கைம். 2009இல் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு முன் அமெரிக்காவால் அமைதி பேச்சுவார்த்தை என்ற பெயரில் தமிழர்களை அழிக்க அனுப்பப்பட்டவர். இப்படிப்பட்ட அமெரிக்க அடிவருடி ஒரு விருதினை கொடுக்கிறானென்றால் இதற்கு பின்னால் என்னென்ன கைமாறியிருக்கிறது என்பதையும் நாம் வருங்காலத்தில் உன்னிப்பாக கவனிக்கவேண்டும்.

Leave a Reply