திருநெல்வேலி பொதுக்கூட்டத்தின் அனுமதியினை காவல்துறை ரத்து செய்திருக்கிறது

- in பரப்புரை

திருநெல்வேலி பொதுக்கூட்டத்தின் அனுமதியினை காவல்துறை ரத்து செய்திருக்கிறது

திருமுருகன் காந்தி அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி திருநெல்வேலியில் பொதுக்கூட்டம் நடத்திட அனுமதி கோரி பல நாட்களுக்கு முன்பே கடிதம் கொடுக்கப்பட்டு, காவல்துறை ஒப்புதலின் பேரிலேயே கூட்டத்திற்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டது.

பல்வேறு செலவுகள் செய்யப்பட்டு இன்று கூட்டம் நடைபெற இருந்த நிலையில், நேற்று இரவு தொலைபேசியில் அழைத்து கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார்கள். செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ”மிக முக்கிய நபர்கள்” நெல்லை மற்றும் கன்னியாகுமரிக்கு வருவதாகவும் அவர்களுக்கு அதிகப்படியான பாதுகாப்பு கொடுக்க வேண்டிருப்பதால் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத நிலை உள்ளதாக எழுதி மொட்டைக் கடுதாசி போன்ற ஒரு மறுப்புக் கடிதத்தினை காவல்துறை அளித்திருக்கிறது.

ஒரு அடக்குமுறையை எதிர்த்து பேசுவதற்கே இத்தனை தடைகள். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என சொல்லும் போது ஒரு மாவட்டத்தின் மொத்த காவல்துறையும் “மிக முக்கியமான” நபர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப் போகிறதாம். யார் அந்த அதி முக்கியமான நபர்கள் என்று தெரியவில்லை.

திருநெல்வேலியில் மற்றொரு தேதியில் மீண்டும் கூட்டத்தை நடத்துவதற்கான முயற்சியினை மே பதினேழு இயக்கம் மேற்கொள்ளும். இன்று(21-9-2018) மாலை நடைபெற இருந்த பொதுக்கூட்டம் அனுமதி மறுப்பின் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply