ஆலந்தூர் நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி 5-9-2018

மின்சார விநியோகத்தினை தனியார்மயமாக்குவதைக் கண்டித்தும், நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவது மோடி அரசு WTOல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் காரணமாகவே என்றும் திருமுருகன் காந்தி ஆலந்தூர் நீதிமன்றத்தில் இன்று(5-9-2018) பேசினார்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் மோடி அரசு தேச விரோதமாகவும், மக்கள் விரோதமாகவும் செயல்படுவதாக தெரிவித்தார்.

மாணவி சோஃபியாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், சோஃபியாக்களின் உரிமையை எவராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

தன் மீது தொடர்ச்சியாக பொய் வழக்குகள் போடப்படுவதாகவும், பாஜகவின் காவல்துறையாக காவல்துறை செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, தனது பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply