தோழர் வளர்மதி மற்றும் தோழர்கள் மீது தகாத முறையில் தாக்குதல் நடத்தி கைது செய்த காவல்துறைக்கு மே பதினேழு இயக்கம் கடும் கண்டனம்

- in பரப்புரை

கேரள நிவாரணப் பணிகளுக்காக பொருட்கள் சேகரித்த பொதுநல மாணவ எழுச்சி இயக்கத்தின் தோழர் வளர்மதி மற்றும் தோழர்கள் மீது தகாத முறையில் தாக்குதல் நடத்தி, அவரை கைது செய்த காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களை மக்களிடம் வசூலிப்பதில் கூட அரசு தலையிட்டு தடுப்பது என்பது மிகப் பெரும் பாசிசம்.

சமூகத்தில் மக்களுக்காக போராடும் ஒரு மாணவி மீது பாலியல் ரீதியாக ஒரு காவல் அதிகாரி தாக்குதல் நடத்தியிருப்பது கேவலத்தின் உச்சம். அந்த காவல் அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வளர்மதி உள்ளிட்ட கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply