திருமுருகன் காந்தி மீது கொடூரமான UAPA சட்டம்

- in பரப்புரை

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களின் மீது இந்தியாவின் மிகக் கொடூரமான கருப்பு சட்டமான UAPA ஏவப்பட்டுள்ளது. இதன் மூலம் திருமுருகன் காந்திக்கு பிணை கிடைப்பதை நீண்ட காலத்திற்கு தடுத்திருக்கிறார்கள். இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

மத்திய பாஜக அரசின் தூண்டுதலின் பேரில் இந்த கடுமையான அடக்குமுறை திருமுருகன் காந்தி மீது ஏவப்பட்டுள்ளது. ஒரு தீவிரவாதியை நடத்துவதைப் போன்று திருமுருகன் காந்தியை தனிமை சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அவரின் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் அவரை சிறுநீர் கூட கழிப்பதற்கு அனுமதிக்காமல் வேலூரிலிருந்து, சென்னை, நாகர்கோயில், சீர்காழி என்று அலைக்கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் மனித உரிமைகள் குறித்து உரையாற்றக் கூடிய திருமுருகன் காந்தி மீது ஒரு தீவிரவாதியைப் போல, UAPA சட்டம் ஏவப்பட்டிருப்பது என்பது, தமிழ்நாட்டின் அனைத்து செயல்பாட்டாளர்களுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கையாகும். இந்த நேரத்திலும் ஜனநாயக சக்திகளாகிய நாம் ஒன்றிணைந்து நம் குரலை எழுப்பாவிட்டால் நம் மீதான ஒடுக்குமுறை தீவிரப்படுத்தப்படும்.
ஒன்றிணைவோம். திருமுருகன் காந்தி மீது UAPA ஏவப்பட்டதைக் கண்டிப்போம். திருமுருகன் காந்தியை விடுதலை செய்

Leave a Reply