தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கி.வே.பொன்னையன் கைது – மே பதினேழு இயக்கம் கண்டனம்

- in பரப்புரை

தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கி.வே.பொன்னையன் கைது செய்யப்பட்டிருப்பதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி வரும் தோழர் கி.வே.பொன்னையன் அவர்கள் பெரியாரின் கொடி எரிப்பு போராட்ட அறிவிப்பு குறித்த ஒரு ஓவியத்தினை தனது முகநூல் பக்கத்தில் பதிந்திருந்தார். தேசிய சின்னங்களை அவமதித்ததாக சொல்லி பாஜகவின் மாவட்ட தலைவர் கொடுத்த புகாரின் பேரில் அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பெரியார் சிலையை உடைப்பேன் என்று சொன்ன எச்.ராஜாவோ, பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி.சேகரோ இதுவரையில் கைது செய்யப்படவில்லை. தொடர்ச்சியாக மதக் கலவரத்தையும், ஜாதிக் கலவரத்தையும் தூண்டும் ரீதியில் பேசி வரும் எச்.ராஜாவையோ, எஸ்.வி.சேகரையோ கைது செய்ய சொல்லி பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்ட பிறகும், போராட்டங்கள் நடத்தப்பட்ட பிறகும் அவர்கள் கைது செய்யப்படவில்லை.

ஆனால் பாஜகவினர் புகார் கொடுத்தால் மக்கள் போராளிகளை உடனே கைது செய்கிறார்கள். இங்கு யாருடைய ஆட்சி நடைபெறுகிறது என்ற கேள்வி தவிர்க்க முடியாததாய் மாறுகிறது.

கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதை நாம் எதிர்க்க வேண்டும். கி.வே.பொன்னையன் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. 

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply