பிஜேபி அரசின் அவலங்களை சொல்லும் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் மோடி அரசு

பிஜேபி அரசின் அவலங்களை சொல்லும் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் மோடி அரசு

2014இல் கார்ப்ரேட் முதலாளிகளாலும் , ஆர்.எஸ்.எஸ் என்ற பிற்போக்கு வலதுசாரி இயக்கத்தாலும் முன்மொழியப்பட்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு. மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் வெறும் விளம்பரங்களின் மூலம் தனது அரசு அதை செய்தது இதை செய்தது என்ற போலி பிம்பத்தை கட்டி எழுப்பி வருகிறது. இதற்கு பெரும்பாலான ஊடகங்கள் துணைபோகும் அவலமும் நடக்கிறது. அதையும் மீறி பிஜேபி அரசின் அவலங்களை வெளிக்கொண்டுவரும் பத்திரிக்கையாளரை அந்நிறுவனத்திற்கு அரசின் சார்பில் நெருக்கடி கொடுத்து வெளியேற்றும் வேலையை மோடி அரசு செய்கிறது.

ஏற்கனவே EPW பத்திரிக்கையில் அதானி குழுமத்திற்கு மோடி அரசு காட்டிய சலுகை குறித்து எழுதியாதால் அதன் ஆசிரியர் பரன்ஜாய் குஹா தாகுர்தா நெருக்கடி கொடுக்கப்பட்டு இராஜினாமா செய்யவைக்கப்பட்டார். அதேபோல The Wire இணையத்தில் பாஜக தலைவர் அமித்ஷாவின் மகனின் நிறுவனம் எப்படி ஒரு வருடத்தில் 110மடங்கு வளர்ச்சி கண்டது என்று எழுதியதற்காக அதன் ஆசிரியர் மிரட்டப்பட்டார். இதுபோல என்னெற்ற பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து மிரட்டுப்பட்டு வருகிறார்கள் இந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருப்பவர் நொய்டாவை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவரும் ABP இந்தி தொலைகாட்சியின் நிர்வாக இயக்குநர் மிலிந்த காந்தேகார் மற்றும் பத்திரிக்கையாளர் புன்யா பிரசன் பாஜ்பாய் இருவரும் தங்களது வேலையை இராஜினாமா செய்திருக்கிறாரகள்.

இவர்கள் இருவரும் வெளியேறியதற்கான காரணங்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும், இவர்கள் கடந்த மாதம் வெளியிட்ட ஒரு நிகழ்ச்சியே இவர்கள் வேலையை இழந்ததற்கு காரணமாக இருந்திருக்கிறது. அதாவது

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னால் மோடி அரசு விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயத்தை அறிவித்தது. இதனால் எங்களின் (விவசாயிகளின்) வருமானம் இரட்டிப்பு ஆகிவிட்டதென்று மோடி அரசுக்கு நன்றி என்று சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சந்திரமணி என்ற பெண் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் ஒரு காணொளியை பிஜேபி அரசு விளம்பரப்படுத்தியது. மறுநாள் அனைத்து பத்திரிக்கைகளிலும் இந்த செய்தி முதல் பக்கத்தில் விளம்பரமாக அரசே கொடுத்தது. இந்த சம்பவத்தின் உண்மைதன்மை அறிய மேற்கண்ட ABP தொலைகாட்சியின் நிர்வாக இயக்குநரின் உத்தரவின் பேரில் செய்தியாளர் பாஜ்பாய் சம்பந்தப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து உண்மையை வெளிக்கொண்டுவந்தார். அதாவது அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் தான் அப்படி சொல்லவேண்டுமென்று சொல்லச்சொன்னார்கள் என்ற உண்மையை அவர் சொன்னதை அந்த தொலைகாட்சி தனது மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பிவிட்டது.

இதனை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் டிவிட்டரில் பதிவு செய்ததோடு நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த பிஜேபி அரசு சமப்ந்தப்பட்ட செய்தி நிறுவனத்தை மிரட்டி ஒளிபரப்புக்கு தடை வித்தித்து ஒருவழியாக அந்த நிகழ்ச்சியை எடுத்த பத்திரிக்கையாளரை பணியிலிருந்து நீக்க வைத்திருக்கிறது. தான் சொல்லித்தானே அவர் இந்த உண்மையை வெளிக்கொணர்ந்தாரென்று அதன் நிர்வாக இயக்குநரும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இப்படியாக கருத்துரிமையை மறுத்து தாங்கள் ஒரு பாசிசவாதிகள் தான் என்று மீண்டும் மீண்டும் நிருபித்துக்கொண்டிருக்கிறது மோடி அரசு.

Leave a Reply