வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் தீர்ப்பினைக் கண்டித்து மதுரையில் ரயில் மறியல்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் தீர்ப்பினைக் கண்டித்து மதுரையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் இணைந்து இன்று 21-4-2018 ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மதுரையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்று வன்கொடுமை சட்டம் நீர்த்துப் போகச் செய்வதை எதிர்த்து முழக்கமிட்டனர்.

தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் முகிலரசு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் கிட்டுராசா, ஆதித்தமிழர் கட்சியின் தோழர் சிதம்பரம், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழர் சாகுல் ஹமீது, தமிழ் மக்கள் முன்னணியின் தோழர் தங்கபாண்டியன் மற்றும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும் பங்கேற்றனர்.

Leave a Reply