காவிரி உரிமைக்கு திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

காவிரி உரிமை மீட்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 14-4-2018 அன்று திருவாரூரில் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. இதில் 177.25 டி.எம்.சி என்று தமிழ்நாட்டின் தண்ணீரைக் குறைத்தது ஏற்க முடியாதது என்றும், 378 டி.எம்.சியை நாங்கள் முன்வைக்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கர்நாடகத்திற்கு வழங்கப்படும் தண்ணீர் பல மடங்கும் கூடியிருப்பதும், தமிழகத்திற்கு வழங்கப்படும் த்ண்ணீர் முற்றிலுமாக குறைக்கப்பட்டிருப்பதும் முன்வைத்து பேசப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தாளாண்மை உழவர் இயக்கத்தின் தோழர் கோ.திருநாவுக்கரசு, திருவாரூர் விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தோழர் ஜி.வரதராஜன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் சாக்கோட்டை இளங்கோவன், தமிழர் தன்மானப் பேரவையின் தோழர் சு.சா.ராசன், மே பதினேழு இயக்கத்தின் தோழர் பாலாஜி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Leave a Reply