தமிழர் விடியல் கட்சியின் 4ம் ஆண்டு நாள் நிகழ்வு – மே 17 இயக்கம் பங்கேற்பு

- in ஈழ விடுதலை, மே 17

தமிழர் விடியல் கட்சியின் 4ம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு அக்கட்சியின் சார்பில் கரூரில் 09-மார்ச்-2018 அன்று நடத்தப்பட்ட தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.

கரூரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த கூட்டம் துவக்கப்பட்டது.

நினைவேந்தலின் போது சிறைக்கு சென்ற அனைத்து தோழர்களுக்கும் கூட்டத்தின் போது மரியாதை செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன் மற்றும் இளமாறன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் சீனி விடுதலையரசு, காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் மகேசு உள்ளிட்டோரும் உரையாற்றினர்.

Leave a Reply