சிலை உடைப்புகள்-மதுரை பாஜக அலுவலகம் முற்றுகை

பெரியார், அம்பேத்கர், லெனின் சிலைகளை உடைத்ததைக் கண்டித்தும், கலவரங்களை தூண்டும் சமூக விரோதி எச்.ராஜா வினைக் கைது செய்ய வலியுறுத்தியும் மதுரையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பாஜக அலுவலகத்தினை 07-3-2018 அன்று முற்றுகையிட்டனர்.

எச்.ராஜாவின் படங்கள் எரிக்கப்பட்டது.

தந்தை பெரியார் சமூக நீதி, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பகுத்தறிவின் அடையாளம். தமிழர்களின் தந்தையான பெரியார் சிலை மீது இனியும் கைவைத்தால், பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல் தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படும் என்று தோழர்கள் முழுக்கமிட்டனர்.

லெனின், அம்பேத்கர், பெரியார் மூவரும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக உழைத்தவர்கள். இவர்களின் சிலையை உடைத்ததன் மூலம் பாஜக கும்பல் தன்னை உழைக்கும் மக்களின் எதிரி என்று பிரகடனப்படுத்தியிருக்கிறது என்றும் தெரிவித்தனர்.

Leave a Reply