’தமிழர்களை கழுத்தறுப்பேன்’ என சைகை காட்டிய ப்ரியங்கா பெர்னாண்டோ கைது செய்யப்பட வேண்டும்

- in அறிக்கைகள்​, மே 17

’தமிழர்களை கழுத்தறுப்பேன்’ என சைகை காட்டிய இலங்கை தூதரக அதிகாரி பிரிகேடியர்.ப்ரியங்கா பெர்னாண்டோவை இங்கிலாந்தினை விட்டு வெளியேற்ற அழுத்தம் அதிகரிக்கிறது. தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்ட இந்த குற்றவாளி உண்மையில் கைது செய்யப்பட வேண்டும்.

இலங்கை அரசின் இனவெறி தனது கோரப்பல்லை காட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில் இலங்கையில் அரசியல் சாசனத்திற்குள்ளாக தமிழர்களுக்கு தீர்வு தேடுவது தற்கொலைக்கு சமம் என்பதை இந்நிகழ்வு மீண்டும் நிரூபித்திருக்கிறது,

இனப்படுகொலையாளனின் திமிரை ஒடுக்கும் வகையில் நாம் ஒன்றாதல் வேண்டுமென்பதே இந்நிகழ்வு நமக்கு சொல்லும் செய்தி.

’தமிழீழ விடுதலை’ எக்காலத்திலும் சமரசம் செய்துகொள்ள முடியாத மக்கள் கோரிக்கை.

Leave a Reply