ஜி.எஸ்.டி வரி முறையும் மே 17 இயக்கத்தின் கூற்றும்

- in அறிக்கைகள்​, மே 17
ஜி.எஸ்.டி வரி முறையும் மே 17 இயக்கத்தின் கூற்றும்

ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் கடந்த வருடம் ஜீலை 01ஆம் தேதி அம்ல்படுத்தப்பட்ட போது, இந்த பொருட்களுக்கு இவ்வளவு வரியா அந்த பொருட்களுக்கு அவ்வளவு வரியா என்று வரிகுறித்து மட்டுமே பேச நம்மை
தூண்டினார்கள். ஆனால் மே பதினேழு இயக்கம் உடனடியாக அறிவித்தது இந்த வரிமுறை என்பது வெறும் பொருட்களுக்கான வரிவிதிப்பு முறையை அமல்படுத்த மட்டும் கொண்டுவரப்படவில்லை. இது இந்திய ஒன்றியத்தில் இருக்கும் ஜனநாயக முறையையே மாற்றியமைத்திருக்கிறது.இதுஆபத்தானதென்று சொன்னோம்.

”அதாவது ஒரு பொருட்களுக்கு போடப்படும் வரியானது தொடர்ச்சியாக நடக்கும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து மாற்றியமைத்துக்கொள்ளலாம். ஆகவே இதுவல்ல பிரச்சனை. முக்கியமாக இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால் இனிமேல் மாநில அரசுகள் வரிவசூல் செய்யமுடியாதபடி செய்திருக்கிறது. இதுதான் ஜி.எஸ்.டி முறையின் தலையாய பிரச்சனை. இதன்படி மாநில அரசுகள் தங்களது மாநிலத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை பெறுவதற்கு மத்திய அரசிடம் நிதிக்காக கையேந்தி நிற்கவேண்டிய நிலையை இந்த முறை உருவாக்கியிருக்கிறது. எனவே நாம் இந்த கோணத்திலிருந்து தான் இதனை எதிர்க்கவேண்டுமென்று அன்றே சொன்னோம்.”

இன்று நாங்கள் சொன்னது தான் உண்மையென்று நிறுவும் விதமாக தொடர்ந்து நடக்கும் ஜி.எஸ்.டி கவுன்சில் நடவடிக்கைகள் உணர்த்துகின்றது. உதாரணாமாக இந்த வரிமுறை அமுல்படுத்தும் போது வேண்டுமென்றே அத்தியாவசிய பொருட்களுக்கு அதிக வரி 28% வரி போட்டிருந்தார்கள். உடனே நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களுக்கு இவ்வளவு வரியா என்று வரியை குறைக்க மட்டும் கோரிக்கை வைத்தனர். என்னமோ மோடி கும்பல்கள் நேர்மையின் சிகரம் போல நாங்கள் அடுத்தடுத்து நடக்கும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டங்களில் இந்த வரியை குறைக்க நடவடிக்கை எடுப்போமென்று சொல்லியது. அதேபோல அடுத்தடுத்து செப்’17, அக்’17, டிசம்பர்’17 ஜனவரி ‘18 ஆகிய மாதங்களில் நடந்த கூட்டங்களில் பெரும்பாலான பொருட்களுக்கான வரியை குறைத்துவிட்டார்கள். நேற்று நடந்த கூட்டத்தில் கூட 82பொருட்களுக்கான வரியை குறைத்திருக்கிறார்கள். ஆகவே இப்போது மக்கள் அனைவருக்கும் வரியை குறைத்துவிட்டார்கள் என்பது மட்டும் தான் தெரியும். ஆனால்

ஆனால் நேற்று நடந்த 24வது கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் தங்களது மாநிலங்களுக்கு வருவாய் குறைந்துவிட்டதெனவும் எனவே எங்களது மாநில வளர்ச்சிக்கு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிக நிதி ஒதுக்க வேண்டுமெனவும் கேட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் சார்பாக சென்ற ஓ.பன்னிர்செல்வம் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது நீர்நிலைகளை தூர்வார்வது நிதிகளை இணைப்பது போன்ற திட்டங்களுக்கு நிதியில்லை எனவே எங்களுக்கு அதிக நிதி ஒதுக்கவேண்டுமென்று கெஞ்சி விட்டு வந்திருக்கிறார். பார்க்க படம்01.

இதைதான் மே 17 இயக்கம் சொன்னது வரிகள் மாற்றமடையும் ஆனால் மாநில வளர்ச்சி இனி மத்திய அரசை நம்பி தான் இருக்கமுடியுமென்று. இது தான் நேற்றைய கவுன்சில் கூட்டத்தின் மூலம் தெளிவாகி இருக்கிறது.

ஆதாரங்கள்:

1.http://www.thehindu.com/news/national/tamil-nadu/exempt-projects-executed-for-states-from-gst-says-tn/article22467364.ece.

2.https://economictimes.indiatimes.com/news/economy/policy/gst-rates-changed-for-30-items-deadline-for-gstr-1-filing-extended-to-october/articleshow/60440162.cms.

3.http://www.gstcouncil.gov.in/meetings.

4.http://www.moneycontrol.com/news/business/economy/gst-council-cuts-rates-on-82-items-introduces-tax-evasion-steps-gears-up-for-simple-return-filing-2486413.html.

 

Leave a Reply