இந்தியாவிலுள்ள அனைத்து பெண்களின் உயிரோடு விளையாடும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி அரசு

- in அறிக்கைகள்​, மே 17
இந்தியாவிலுள்ள அனைத்து பெண்களின் உயிரோடு விளையாடும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி அரசு

ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா கும்பல்கள் சிறுபாண்மையினருக்கு மட்டும் எதிரானவர்கள் அல்ல. இந்த ஒன்றியத்திலுள்ள ஓட்டுமொத்த மக்களுக்கும் எதிரானவர்கள் அவர்கள். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ஓட்டுமொத்த பெண்களுக்கும் எதிரானவர்கள் என்பது தான் இவர்களின் கடந்த கால வரலாறு. அதை மெய்பிக்கும் விதமாகத்தான் அவர்களின் தற்கால செயல்பாடுகளும் இருக்கின்றது. உதாரணமாக

இந்தியாவில் இருக்கும் பெண்களை தாக்கும் புற்றுநோயில் இராண்டாம் இடத்தில் இருப்பது கர்ப்பபை புற்றுநோய் (Cervical cancer). இந்த நோயினால் ஒவ்வொரு வருடமும் இந்திய பெண்கள் 67,477பேர் இறக்கிறார்களென்று இந்திய சுகாதாரத்துறை அறிக்கை சொல்லுகிறது. பார்க்க படம் 01. இதுகுறித்து ஆய்வு மேற்க்கொண்ட இந்திய சுகாதாரத்துறை இதற்கான காரணத்தை இதற்கான தீர்வையும் முன்மொழிந்தது.

அதாவது இந்த புற்றுநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசி என்பது இந்தியாவிலேயே இரண்டு தனியாரிடம் தான் இருக்கிறது. இவர்கள் இந்த தடுப்பூசியை ஒரு டோஸ் 3000 ரூபாய்க்கு விற்கிறார்கள்.மொத்தம் 3 டோஸ்கள் போடவேண்டும் அப்படியென்றால் 9000ரூபாய் செலவாகிறது. இவ்வளவு செலவு செய்வது ஏழை பெண்களுக்கு முடியாத காரணத்தால் இதனை போடாமல் இருக்கிறார்கள். இதுவே இந்த புற்றுநோய் வருவதற்கு முதல் காரணமென்றும். இதனை நீக்கவேண்டுமானால் அரசே இந்த தடுப்பூசியை போடவேண்டும் அல்லது அல்லது இதற்கு ஆகும் செலவை குறைக்கும் வழியை அரசு தேடவேண்டும் இதுவே இப்போது நடக்கும் இந்த உயிரழப்பை தடுக்கும் ஒரேவழி என்று அது சொன்னது.

இதனடிப்படையில் இந்திய சுகாதாரத்துறை சில நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கும்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொருளாதார பிரிவு இந்திய பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி இந்த தடுப்பூசிக்கு மாற்றை அறிமுகப்படுத்தும் செயலை உடனே நிறுத்தவேண்டுமென்று சொல்லியது. ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலில் இயங்கும் மோடி அரசு உடனே இதனை நிறுத்தி விட்டது.

இந்த திட்டத்தை ஏன் நிறுத்தவெண்டுமென்பதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சொன்ன காரணம் இந்திய ஒன்றியத்திலுள்ள அனைத்து பெண்களையும் கேவலப்படுத்துவது மாதிரியும், இந்த இந்துத்துவ கும்பல்கள் பெண்களை எவ்வளவு கேவலமாக பார்க்கிறது என்பதும் வெளிப்படுத்தியது. அதாவது இந்த புற்றுநோயை தடுக்கும் தடுப்பூசிக்கான விலையை குறைத்து விட்டால் பெண்களுக்கு பாலியல் சுதந்திரம் கிடைத்தமாதிரி ஆகிவிடும். இது இந்திய பண்பாட்டை சீர்குலைத்துவிடும். எனவே இதனை அனுமதிக்கக்கூடாதென்று எழுதியிருக்கிறது. அதாவது பெண்கள் அனைவரும் தவறான வழியில் நடப்பதால் தான் இந்த கர்ப்பப்பை புற்றுநோய் வருகிறதென்று நினைக்கும் கீழ்த்தரமான தத்துவத்தை கொண்டவர்கள் தான் இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள். இவர்களின் இந்த செயலால் இந்தியாவில் கர்பப்பப்பை புற்றுநோயால சாகும் பெண்களின் எண்ணிக்கை இன்னும் உயரும்.

ஆகவே தான் சொல்லுகிறோம் இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் சிறுபான்மையினருக்கு மட்டும் எதிரிகளல்ல ஓட்டுமொத்த இந்திய சமூகத்திலிருக்கிற அனைவருக்குமே எதிரானவர்கள் குறிப்பாக பெண்களுக்கு எதிரானவர்கள்.

குறிப்புகள்:
http://indianexpress.com/article/india/cervical-cancer-vaccine-that-rss-wing-wanted-out-faces-a-wait-5018322/?utm_source=izooto&utm_medium=push_notification&utm_campaign=RSS+is+opposing+the+drug&utm_content&utm_term

 

Leave a Reply