ஹச் மானியம் ரத்தும் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பல்களின் பொய்களும்

- in அறிக்கைகள்​, மே 17

இந்திய ஒன்றியத்திலுள்ள சிறுபாண்மை இஸ்லாமிய மக்களின் புனித தலமான சவுதியிலுள்ள மெக்கா மதினாவுக்கு ஹச் புனிதயாத்திரை மேற்கொள்ள வேண்டுமென்பதற்காக இந்திரகாந்தி இந்திய ஒன்றியத்தின் பிரதமராக இருந்த பொழுது அப்படி புனிதயாத்திரை செல்பவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். அதன்படி தொடர்ந்து மானியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் மதவெறி வைத்து மக்களை பிரித்தாளும் ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் தொடர்ந்து இதனை எப்படியாவது நிறுத்திவிடவேண்டுமெண்று கங்கனம் கட்டிக்கொண்டு சதி செய்தது. அதன்படி 2012இல் ஒரு வழக்கை தாக்கல் செய்தது. அதனை விசாரித்த நீதிமன்றம் மதங்களை பரப்ப பெருமளவு செலவு செய்வதை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். மேலும் இதுபோன்ற விசயங்களுக்கு செலவழிக்கும் தொகையை ஏழை பெண்களின் கல்விக்கு செலவழிக்கவேண்டுமென்று பொதுவான ஒரு தீர்ப்பை வழங்கியது. ஆனால் இது தேவையிலலத சிக்கலை உருவாக்கும் என்பதற்காக தொடர்ந்து மானியம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேரடியாக இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பலின் அரசியல் அமைப்பான பிஜேபி 2013இல் ஆட்சிக்கு வந்தபின் இதனை நிறுத்த தொடர்ந்து பல்வேறு வழிகளில் முயற்சி எடுத்தது. அதன்படி 2014லிருந்து வருடந்தோறும் மானியத்திற்கென்று ஒதுக்கும் தொகையை வெகுவாக பிஜேபி அரசு குறைத்தது பார்க்க படம் 01. தற்போது அதனை ஒரேடியாக நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது.

இந்த சதி திட்டத்தை மற்ற மக்கள் யாரும் கேள்விகேட்டுவிடக்கூடாது என்பதற்காக இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஏன் மானியம் வழங்குகிறீர்கள் என்ற விசம பிரச்சாரத்தை இந்த கும்பல் முன்னெடுத்தது. ஆனால் இந்த ஹச் யாத்திரைக்கு அரசு கொடுக்கும் மானியம் என்னவோ 450கோடி தான். ஆனால் இந்துக்களுக்கு கொடுக்கும் மானியம் இதனை விட பலமடங்கு அதிகம் உதாரணமாக

ஹரித்வார், அலாகாபாத், நாசிக் மற்றும் உஜ்ஜைன் ஆகிய இடங்களில் நடைபெறும் கும்ப மேளாக்களுக்கு மட்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் செலவிட்ட தொகை 2014இல் 3650கோடி. அதேபோல உஜ்ஜயினில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சிம்ஹஸ்தா மஹாமகத்திற்கு மத்தியப் பிரதேச அரசுக்கு 100 கோடி ரூபாய் மத்திய பிஜேபி அரசு ஒதுக்கியது. அதேபோல ம.பியை ஆளும் பா.ஜ.க தலைமையிலான சிவராஜ் சிங் சவுகான் அரசாங்கம் 2016 ஆம் ஆண்டில் சுமார் 3,400 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இது அடுத்த வருடங்களில் ரூ 5,000 கோடிக்கு உயரும் என்று அரசு வாக்குறுதி கொடுத்திருக்கிறது அதேபோல திபெத்திலுள்ள கைலாஷ் மன்சரோவர் கோயிலுக்கு யாத்திரை செல்பவர்களுக்கு உ.பி அரசு ரூ. 50,000கொடுத்தது. தற்போது அது ஒரு லட்சரூபாயாக உயர்தப்பட்டிருக்கிறது. இதுபோக அமர்நாத் கேதர்நாத காசி போன்ற இடங்களுக்கு யாத்திரை செல்லும் இந்து பக்தர்களுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெருந்தொகையை செலவழிக்கிறது. இதனோடு ஓப்பிட்டு பார்த்தால் ஹச் யாத்திரைக்கு கொடுக்கும் மானியம் ஒரு பொருட்டே இல்லை. ஆனால் மதவெறியை எப்படியாவது தூண்டி அரசியல் ஆதாயம் தேடத்துடிக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் வேண்டுமென்றே பொய்யான பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள்.

ஹச்யாத்திரைகான மானியத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே நிறுத்துகிறோமென்று இந்த பிஜேபி அரசு சொல்லுமாயின். உச்ச நீதிமன்ற பொதுவாக மத விசயங்களுக்கு செலவழிக்கும் தொகையை ஏழை பெண்களின் கல்விக்கு செலவழிக்கலாமென்று தானே சொல்லியிருக்கிறது. அப்படியென்றால் பெருமளவிலான தொகை இந்துக்களுக்கு தான் செலவிடப்படுகிறது அதையும் இந்த மதவெறி பிஜேபி கும்பல் நிறுத்துமா? என்ற கேள்வி எழுகிறது.

குறிப்புகள்:

  1.  https://thewire.in/214513/haj-subsidy-cancelled-air-india/
  2. https://www.outlookindia.com/website/story/is-haj-subsidy-a-sleight-of-hand-to-keep-air-india-afloat/297678
  3. https://scroll.in/article/865322/the-daily-fix-removing-haj-subsidy-is-welcome-but-secular-principle-must-apply-to-all-pilgrimages

Leave a Reply