தோழர் முகிலன் பாளையங்கோட்டை சிறையில் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம்

மக்களுக்காக போராடியதற்காக 100 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் தோழர் முகிலன் அவர்கள் பாளையங்கோட்டை சிறையினில் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கி உள்ளார்.

அணு உலை எதிர்ப்புக்காக 1 லட்சம் பேர் மீது போடப்பட்ட 132 வழக்கு,

ஜல்லிகட்டிற்கு போராட்டத்தில் அனைவரின் மீதும் போடப்பட்ட வழக்குகள்,

மீத்தேன், ஓ.என்.ஜி.சி, கெயில், நிலத்தடி நீர் கொள்ளை, மணல் கொள்ளை உள்ளிட்ட போராட்டங்களின் போது மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள்,

ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி போராடிய மக்கள்மீது போடப்பட்ட வழக்கு,

என அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வலியுறுத்தி இந்த போராட்டத்தினை துவக்கி இருக்கிறார்.

தோழர் முகிலன் அவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம். தோழரின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply