காவல்துறையின் காவித்தனத்திற்கு மே 17 இயக்கம் கண்டனம்

- in அறிக்கைகள்​, மே 17

கடந்த 22.12.17 அன்று காஞ்சிபுரம் புதிய இரயில் நிலையத்தில் வைக்கப் பட்டிருந்த அண்ணல் அம்பேத்கரின் படத்தை அகற்றிவிட்டு சங்கராச்சாரியின் படங்களை வரைந்து வைத்திருந்திருக்கிறார் இரயில்வே நிலைய மேலாளர் சீனிவாசலு. இதனைக் கண்டித்து காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினை சேர்ந்தவர் காவல்துறையிடம் புகார் கொடுத்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் அம்பேத்கர் படத்தை வைத்துவிட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் அன்று இரவே ரயில்நிலைய மேலாளர் RSS, பயங்கரவாதிகளோடு சேர்ந்துகொண்டு மீண்டும் அதே இடத்தில் அம்பேத்கரின் படத்தை அகற்றிவிட்டு சங்கராச்சாரியின் படங்களை மீண்டும் வரைந்து வைத்திருக்கிறார்.

இதனை கண்டித்து இன்று அம்பேத்கரின் படத்தை அகற்றிய ரயில்நிலைய மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுகொடுக்க சென்ற மக்கள் மன்றத் தோழர்களை கைது செய்துள்ளது காவல்துறை. அம்பேத்கரின் படத்தை அகற்றி அசிங்கபடுத்தியவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, அதைத் தட்டிக் கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறதென்றால் தமிழகத்தை ஆளுவது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி தான் தான் என்பது நிருபணமாகியுள்ளது.

காவல்துறையின் இந்தக் காவித்தனத்தை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக காஞ்சி மக்கள் மன்ற தோழர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். மீண்டும் அம்பேத்கர் படம் இருந்த இடத்தில் வைக்கப்படவேண்டும்.

காவல்துறையின் இந்த காவி நடவடிக்கைக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள்வோம்.

Leave a Reply