அரசு கவின் கலைக்கல்லூரி மாணவர் பிரகாஷின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

சென்னை அரசு கவின் கலைக்கல்லூரி இறுதி ஆண்டு மாணவர் பிரகாஷின் மரணத்திற்கு நீதி கேட்டு இன்று (15-11-2017) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மரணத்திற்கு காரணமான இந்துத்துவ சாதி வெறிகொண்ட துறைத்தலைவர் ரவிக்குமார் மற்றும் ஆசிரியர் சிவராஜ் ஆகியோரை கைது செய்யக் கோரியும், இவர்களுக்கு துணைபோன முதல்வர் மதியழகன் மீது நடவடிக்கை மேற்கொள்ள கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலித் இயக்கங்கள் மற்றும் முற்போக்கு மாணவர்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த இந்த ஆர்பாட்டத்திற்கு இரா.அன்புவேந்தன் தலைமைவகிக்க, பா.ரஞ்சித், எவிடென்ஸ் கதிர் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், மே 17 இயக்கத்தின் சார்பாக தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்று கண்டனத்தை பதிவு செய்தார்.

அப்போது பத்திரிக்கை செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணலின் காணொளி

Leave a Reply