தமிழீழ விடுதலை ஆதரவு முழக்க போராட்டம் – படங்கள்

- in பரப்புரை

12 08 12
சென்னையில் நடைபெற்ற தமிழீழ ஆதரவு முழக்கப் போராட்டம்!

தமிழீழ ஆதரவு முழக்கப் போராட்டம் என்ற தலைப்பில், மே பதினேழு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (11.08.2012) மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இலண்டன் ஒலிம்பிக் போட்டித் திடலுக்கு முன், உண்ணாப் போராட்டம் நடத்தி வரும் திரு. சிவந்தன் கோபி அவர்களுக்கு ஆதரவுத் தெரிவித்தும், தமிழீழ மண்ணை ஆக்கிரமித்துள்ள இலங்கை அரசுடன் இணைந்து வணிக முன்னெடுப்புகளை நடத்தும் இந்திய பெருமுதலாளிகளைக் கண்டித்தும், தமிழீழம் தான் ஈழத்தமிழர்களின் அரசியல் சிக்கலுக்குத் தீர்வு, எனவே, அதை பெறுவதற்கான பொது வாக்கெடுப்பும், போர்க்குற்றம் புரிந்த இராசபக்சே கும்பல் மீதான அனைத்துலக விசாரணையும் தான் தமிழர்களின் இன்றையத் தேவை எனவும் வலியுறுத்தி இவ்வார்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

இலண்டனில் உண்ணாப் போராட்டம் நடத்தி வரும் திரு. சிவந்தன் கைபேசி வழியாக ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றி, தாய்த் தமிழக உறவுகளுக்கு நன்றி தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ஒருங்கிணைத்தார். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, தென் சென்னை மாவட்டச் செயலாளர் திரு. வேளச்சேரி மணிமாறன், பேராசிரியர் சரசுவதி ஆகியோர் பேசினர். 

மிகக்குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்டாலும், இவ்வார்ப்பாட்டத்தில் திரளான தோழர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

(செய்தி : த.தே.பொ.க. செய்தி பிரிவு)

Leave a Reply