போராடும் மாணவர்களிடம் கோரிக்கை தெளிவு எவ்வளவு முக்கியம் என்பதை கூறினார்.
மேதகு பிரபாகரன் தலைமையிலான புலிகள் தான் போரின் போக்கையும்,நேரத்தையும் நிச்சயித்தார்கள் எதிரிகளல்ல..அது போலவே மாணவர்கள் தான் கோரிக்கைகளையும் போராட்ட வடிவங்களையும் நிச்சயிக்க வேண்டும்.
அமெரிக்காவும் இந்தியாவும் நம் மீது திணிக்கும் 13 வது சட்ட திருத்தத்தையோ ஏற்றுகொள்ள வேண்டிய அவசியம் நமக்கில்லை என வலியுறுத்தினார்.
பதிக்கபட்டவனுக்கு நீதி கிடைப்பதே முதல் குறிக்கோள்.குற்றம் புரிந்தவனுக்கு தண்டனை கிடைப்பது இரண்டாம் பட்சம் தான்.
முதலில் அம்மக்களுக்கு பொதுவாக்கெடுப்பு மூலம் ஒரு நாட்டை பெற்றுத் தரவேண்டும்.பிறகு செய்த இனப்படுகொலை செய்த இலங்கை அரசுக்கு தண்டனை வழங்கலாம் என தனது உரையில் குறிப்பிட்டார்