ஐ.நா அலுவலக முற்றுகை ஏன் ?

- in பரப்புரை
ஐ.நா அலுவலக முற்றுகைக்கு அனைவரையும் அழைக்கிறோம்.

ஏன் முற்றுகை :

2008 அக்டோபர் முதல் 2009 மே இறுதி வரை ஐ.நாவின் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் போர் பகுதிக்கு செல்வதை விஜய் நம்பியார் தடுத்தார்.

2009 ஜனவரி15 வரை மட்டுமே உணவும், மருந்தும் கிடைக்கச் செய்தார் ஜான் ஹோல்ம்ஸ். உணவிற்கு பதிலாக கிரிக்கெட் மட்டைகளையும் அனுப்பினார்கள்.

2009 மார்ச்13இல் போரை நிறுத்த நெருக்கடிதரும் மனித உரிமை கமிசனின் பத்திரிக்கையாளார் சந்திப்பினை விஜய்நம்பியாரும், ஜான் ஹோல்ம்ஸ்ஸும் இணைந்து தடுத்தார்கள்.

2009 மார்ச் முதல் வாரத்தில் தயாரிக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான குற்ற சாட்டுகளை புலிகள் மீது சுமத்துமாறு நெருக்கடி கொடுத்தார் விஜய்நம்பியார்

2009 ஏப்ரலில் வெளியான ஐ.நாவின் சாட்டிலைட் படங்களின் வழியான இனப்படுகொலை ஆதாரங்களை முழுமையற்றது, ஏற்க இயலாதது என்று மறுத்தார் ஜான் ஹோல்ம்ஸ்

2009 ஏப்ரலில் ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் போரை நிறுத்தவேண்டும் என்பது தொடர்பாக விவாதம் வர இருப்பதை ஜப்பானியர்’ தக்காசி’ நிராகரித்து புலிகள் அழிப்படவேண்டியவர் என்றார்.

2009 மே 14இல் இனப்படுகொலை தடுப்பு அதிகாரி, இரண்டு மூன்று நாட்களில் இனப்படுகொலை நடக்கப் போகிறது என்று அறிந்தும் உலகிற்கு சொல்லவேண்டிய கடமையிலிருந்து தவறி இலங்கையிடம் சமரசம் செய்தார்

2009 மே15இல் இனப்படுகொலையை தடுக்கவும், போர்க்கைதிகளை பாதுகாக்கவும் அனுப்பபட்ட விஜய் நம்பியார் இனப்படுகொலை முடியும் வரை முள்ளிவாய்க்காலுக்கு செல்லமறுத்தார். “வெளியே வானிலை சரியில்லை “ என்றார்.

2009இல் போர் நிகழும் பொழுது குழந்தைகளை காக்கவேண்டுமென்பத்ற்காக உருவாக்கப்பட்ட ஐ.நாவின் சிறப்பு துணைத்தலைவர், ஜனவரி-பிப்2009இல் பல ஆயிரம் குழந்தைகள் இறந்த கணக்குகள் ஐ.நாவின் கொழும்பு மையத்தில் ஆவனப்ப்படுத்தப்பட்ட பொழுதும், குழந்தைகள் பாதிக்கப்பட்டதற்கான ஆவணத்தினை போர் முடிந்தபிறகு இரண்டு வாரங்கள் கழித்து ஐ.நா தலைமை அலுவலகத்திற்கு அனுப்பினார்.

2009 மே21-22இல் இலங்கைக்கு சென்ற பான் கி மூன் இலங்கை அரசினை பாராட்டி அறிக்கை வெளியிட்டு பின்பு அதை திருத்தினார். மேலும் இலங்கையின் வெற்றிவிழாவில் கலந்து கொள்ள சென்றார் என்கிற குற்றச்சாட்டு ஐ.நாவிற்குள் எழுந்தது.

2009 மே இறுதியில் சர்வதேச விசாரணையை இலங்கைமீது ஆரம்பிக்கவேண்டும் என்கிற ஐ.நாவின் விதி எண் 99னை மறுதலித்து, நிராகரித்தார். இவ்விதியை நடைமுறைபடுத்தவேண்டும் என்று சொன்ன ஐ.நாவின் சட்ட அலோசனைக் குழுவின் பரிந்துரைகளை மறுத்தார்.

2009 ஜூலையில் ஐ.நாவின் மனித உரிமைக் குழுவின் பரிந்துரையான சர்வதேச விசாரணை கோரிக்கை நடைமுறையை மறுத்து , “ இலங்கை அரசே தமது குற்றங்களை விசாரிக்க கமிசன் அமைக்கட்டடும் “ என்றார்.

2010 டப்ளின் தீர்ப்பாயத்தின் நெருக்கடிக்கு பிறகு ஐ.நாவின் நிபுணர்குழுவினை உருவாக்கினார். இதன் பரிந்துரைகள் மீது இதுவரை நடவெடிக்கை எடுக்கவில்லை.

2009மே மாதத்திலிருந்து முள்வேலி முகாமிற்குள் செல்ல அனுமதி கேட்ட ஐ.நா நிறுவனங்களை தடுத்தது இலங்கை . இதைப் பற்றி எந்தவித விவாதமும் ஐ.நா மன்றத்தில் ஜான் ஹோல்ம்ஸ் எழுப்பவில்லை.

மேற்சொன்னதைப் போன்ற நிகழ்வுகளை ஆய்வு செய்து ஐ.நாவில் உள்ளக அறிக்கையை கொண்டுவந்த சார்லஸ் பெட்ரியின் அறிக்கையை ஐ.நா வெளியிட மறுத்தது. பின்னர் சில பகுதிகளை சார்லஸ் பத்திரிக்கைகளுக்கு கசியவிட்ட பின்னர், முக்கியப்பகுதிகளை கருப்புப் பகுதி கொண்டு நவம்பர்2012இல் மறைத்து வெளியிட்டது. இப்பகுதிகளை மே பதினேழு இயக்கம் உடைத்து 2012 டிசம்பரில் வெளியிட்டது. ..

இந்த அறிக்கை கொண்டுவந்ததற்காக பான் கி மூனுக்கு ஐ.நா மனித உரிமைக் கமிசனில் பாராட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

கடந்தவருடம் மே பதினேழும் தோழமை இயக்கங்களும் நடத்திய போராட்டத்தின் மூலமாக இந்த அறிக்கையும், ஐ.நாவின் அயோக்கியத்தனமும் அம்பலப்படுத்தபப்ட்டடது. இந்தியாவில் நான்கு நகரங்கள், நியூயார்க், பாரிஸ் ஆகிய இடங்களில் நிகழ்ந்த கடந்த வருட போராட்டம் , சார்லஸ் பெட்ரி அறிக்கையைப் பற்றி விசாரித்து பரிந்துரைகள் செய்ய ஜான் இலியாசன் என்கிற ஐ.நாவின் மிக உயர் அதிகாரி கொண்டு குழுவினை கொண்டு வந்தது.

ஜான் இலியசனின் அறிக்கையை ஐ,நா வெளியிடாமல் காலதாமதம் செய்த பொழுது , மே பதினேழு இயக்கம் கடந்த ஜூன் மாதத்தில் இணையம் வழியாக போராட்டம், நெருக்கடி கொடுத்து அவ்வறிக்கையை வெளிக்கொணரச் செய்தது.

இதன் பின்னர் ஜான் இலியாசனை ஐ.நாவின் உயர் பதவிக்கு கொண்டு சென்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர் இலங்கைக்கு எதிராக செயல்படக் கூடாது என்பதற்காக கோத்தபய ராஜபக்சா நேரில் சென்று சந்தித்தார். இதன் பிறகும் நிலையில் தமிழருக்கு சாதகமாக இல்லை.

2012 ஆகஸ்டில் ஐ.நாவின் மறுநிர்மாணம் தொடர்பான உயர் தலைமை அதிகாரி ஜான் ஜிங் இலங்கையில் தமிழர்கள் மறுகுடியமர்த்தப்படுவதை உலகிலேயெ மிகச் சிறப்பாக செய்கிறார்கள் என அறிக்கை வெளியிட்டார்.

2013 ஆகஸ்டில் இலங்கை உருவாக்கிய காணாமல் போனவர் பற்றிய உள்நாட்டு விசாரணைக்குழுவினை ஐ.நா எந்தவித விவாதமும் எழுப்பாமல் ஏற்றுக் கொண்டது.

2013 ஆகஸ்ட் இறுதியில் யாழ்பாணத்திற்கு வந்த நவநீதம் பிள்ளை, எந்த ஒரு தமிழரும் தன்னிடத்தில் “இனப்படுகொலை” குறித்து குற்றச்சாட்டு வைக்கவில்லை என்று பொய்யாக பேசினார். பலர் அவரிடத்தில் பதிவு செய்திருந்தாலும் இவ்வாறு அவர் வெளிப்படையாக பொய் சொன்னார்

நவநீதம் பிள்ளை, இலங்கை அரசின் கட்டுமானக் குறைபாடுகள், செயல்பாட்டின் குறைபாடுகள கடுமையாக சாடினார். ஆனால் அந்த நாட்டின் ஜனநாயகம் தோல்வியுற்ற ஒன்றாக அவர் நம்பவில்லை என்று உறுதிப்படுத்தினார். மாறாக, விசாரிக்காமலேயே புலிகள் பயங்கரவாதிகளுக்கு ஒப்பானவர்கள் என்று பேசினார். ஐ.நாவின் அதிகாரிகளுக்கு யாரையும் விசாரிக்க வேண்டுமானாலும் உரிமை இருக்க முடியும். ஆனால் விசாரிக்கும் முன்பே ஒருபகுதியினரைப் பற்றி குறை சொல்வதோ, தீர்ப்பு வழங்குவதோ கூடாது. அவ்வாறு செய்வது நேர்மையாகாது. இலங்கையை சரிசெய்யவேண்டுமென்பவர், புலிகளை பயங்கரவாதிகள் என்கிறார்.
மேலும் அவர் வடக்கு மாகாணத்தேர்தல் தமிழர்களில் அரசியல் விடியலுக்கு ஒரு ஆரம்பப் புள்ளி என்றார். ஐ.நாவின் மனித உரிமைக் கமிசன் தலைவருக்கு இதைப் பற்றி பேச அதிகாரம் இருக்கிறதா என்பதே கேள்வி.

இவ்வாறு தொடர்ச்சியாக போலியாக் குற்றம் சாட்டிய ஐ.நாவினையும் அதன் அதிகாரிகளை அடையாளம் காட்டவேண்டும், மற்றும், போரில் இலங்கைக்கு ஆதரவாக நின்ற ஜான் ஹோல்ம்ஸ், பான் கி முன், விஜய் நம்பியார் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிகக் வேண்டும் . இவர்கள் தடுத்து வைத்துள்ள சர்வதேச விசாரணையும், தேசிய விடுதலையை அங்கீகரிக்கும் பொதுவாக்கெடுப்பினை உடனே ஆரம்பிக்கவேண்டும் என்கிற கோரிக்கையொடு போராட்டத்தில் பங்கெடுக்க அழைக்கிறோம்.

ஐ.நாவின் அயோக்கியததனத்தினை உலகிற்கு அம்பலப்படுத்திய மாவீர்ன் முருகதாசன் நினைவு நாளில் இதை செய்து முடிப்போம். ஒவ்வொரு வருடமும் இதே தினத்தில் ஐ.நாவினை முற்றூகை இடுவோம். இம்முறையும் செய்வோம். நீதி கிடைக்கும் வரை முற்றுகையைச் செய்வோம்.

நாம் வெல்வோம்.

மே பதினேழு இயக்கம்.

Leave a Reply